பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம்

பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம் (சந்தாலிகள் மொழி: ᱵᱤᱨᱥᱟᱹ ᱢᱩᱸᱰᱟᱹ ᱡᱮᱡᱟᱹᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱩᱰᱟᱹᱱ ᱰᱟᱹᱦᱤ); ( Birsa Munda International Airport), (IATA: IXR, ICAO: VERC), ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சி நகரைச் சேர்ந்த முதன்மை விமான நிலையம் ஆகும். இந்தியாவின் பழங்குடி சுதந்திரப் போராளி பிர்சா முண்டா பெயரால் இது பெயரிடப்பட்டுள்ளது. நகரத்தின் மையத்திலிருந்து சுமார் 5 கிமீ (3.1 மைல்) ஹினோவாவில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. மொத்த விமான நிலையம் 1750 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. [2] இந்த விமான நிலையம் ஆண்டுதோறும் 1.5 மில்லியன் பயணிகளால்ப யன்படுத்தப்படுகிறது மற்றும் இந்தியாவில் 26 வது மிகப்பெரிய விமான நிலையமாகும். [3]

பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம்
ᱵᱤᱨᱥᱟᱹ ᱢᱩᱸᱰᱟᱹ ᱡᱮᱡᱟᱹᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱩᱰᱟᱹᱱ ᱰᱟᱹᱦᱤ
ஐஏடிஏ: IXRஐசிஏஓ: VERC
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் விமான நிலைய அதிகாரசபை இந்தியா
இயக்குனர் பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம் (BMIA)
சேவை புரிவது ராஞ்சி
அமைவிடம் ஹினோவோ, ராஞ்சி, ஜார்கண்ட், இந்தியா
மையம்
உயரம் AMSL 2,120 ft / 646 m
இணையத்தளம் www.ranchiairport.in
நிலப்படம்
IXR
IXR
விமான நிலையத்தின் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
13/31 10,500 3,200 தார் (கருங்காரை)
14/32 12,500 3,810 தார் (கருங்காரை)
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் '11 - மார்ச்சு '12)
பயணிகள் போக்குவரத்து 17,78,349
வானூர்தி போக்குவரத்து 15,009
சரக்கு டன்கள் 4,743
மூலம்: ஏஏஐ[1][1][1]

குறிப்புகள்

  1. Traffic stats for 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.