பிரேசில் பேரரசு
பிரேசில் பேரரசு (Empire of Brazil) தற்போதைய பிரேசில் மற்றும் உருகுவை நாடுகளை உள்ளடக்கிய 19வது-நூற்றாண்டு இராச்சியமாகும். இதன் அரசு மக்களாட்சி நாடாளுமன்றத்தைக் கொண்ட அரசியல்சட்ட முடியாட்சி ஆகும். இதனை பேரரசர் முதலாம் பெட்ரோவும் பின்னர் அவரது மகன் இரண்டாம் பெட்ரோவும் ஆண்டனர். முன்னதாக போர்த்துகல் பேரரசின் குடியேற்ற நாடாக பிரேசில் விளங்கியது; 1808இல் முதலாம் நெப்போலியனின் போர்த்துகல் படையெடுப்பின்போது இளவரசர் (பின்னாளில் மன்னர் யோவான் VI) தப்பியோடி பிரேசிலின் நகரமான இரியோ டி செனீரோவில் தமது அரசவையை மாற்றினார். தமது மூத்த மகனும் வாரிசுமான பெட்ரோவை பிரேசிலை ஆளப் பணித்து தாம் மட்டும் போர்த்துகல் திரும்பினார்.[1] தமது தந்தையின் படையினருடன் போரில் ஈடுபட்டு செப்டம்பர் 7, 1822 இல் பெட்ரோ பிரேசிலின் விடுதலையை அறிவித்தார்.[2][3] அக்டோபர் 12இல் பிரேசிலின் முதலாம் பெட்ரோ என்று முடி சூடினார். புதிய நாடு குறைந்த மக்கள் தொகையுடனும் பலவித இன மக்களுடனும் மிக விரிவானதாக இருந்தது.
பிரேசில் பேரரசு இம்பீரியோ டொ பிரேசில் | ||||||
| ||||||
| ||||||
குறிக்கோள் Independência ou Morte! "விடுதலை அல்லது வீரமரணம்!" | ||||||
நாட்டுப்பண் Hino da Independência (1822–1831) "விடுதலைப் பண்" Hino Nacional Brasileiro (1831–1889) "பிரேசிலிய தேசிய கீதம்" | ||||||
![]() பிரேசில் அமைவிடம் பிரேசில் பேரரசு மிக விரிவாக்கப்பட்டிருந்த நிலையில், 1822–1828, முன்னாள் சிஸ்பிளாட்டினா மாநிலம் உட்பட | ||||||
தலைநகரம் | இரியோ டி செனீரோ | |||||
மொழி(கள்) | போர்த்துக்கேயம் | |||||
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் | |||||
அரசாங்கம் | அரசியல்சட்ட முடியாட்சி | |||||
பிரேசில் பேரரசர் | ||||||
- | 1822–1831 | முதலாம் பெட்ரோ | ||||
- | 1831–1889 | இரண்டாம் பெட்ரோ | ||||
பிரதமர் | ||||||
- | 1843–1844 | பரானா பெருமகனார் (நடைமுறைப்படி) | ||||
- | 1847–1848 | காரவெலசின் இரண்டாம் கோமகன் (அலுவலகம் திறப்பு) | ||||
- | 1889 | ஓரோ பிரெட்டோ (கடைசி) | ||||
சட்டசபை | பிரேசிலின் தேசிய அவை | |||||
- | Upper house | பிரேசிலின் மேலவை | ||||
- | Lower house | பிரேசிலின் மக்களவை | ||||
வரலாற்றுக் காலம் | 19வது நூற்றாண்டு | |||||
- | விடுதலை | 7 செப்டம்பர் 1822 | ||||
- | முதலாம் பெட்ரோவின் முடியேற்பு | 12 அக்டோபர் 1822 | ||||
- | பேரரசின் அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொள்ளுதல் | 25 மார்ச் 1824 | ||||
- | இரண்டாம் பெட்ரோவின் முடியேற்பு | 7 ஏப்ரல் 1831 | ||||
- | லெய் ஓரியா (அடிமைத்தன ஒழிப்பு) | 13 மே 1888 | ||||
- | முடியாட்சி முடிவு | 15 நவம்பர் 1889 | ||||
மக்கள்தொகை | ||||||
- | 1823 est. | 4 | ||||
- | 1854 est. | 7 | ||||
- | 1872 est. | 9 | ||||
- | 1890 est. | 14 | ||||
நாணயம் | ரியல் | |||||
அடுத்திருந்த எசுப்பானிய அமெரிக்கக் குடியரசுகளைப் போலன்றி பிரேசில் அரசியல் நிலைத்துவம், துடிப்பான பொருளியல் வளர்ச்சி, சட்டமைப்பு உறுதிமொழிந்த பேச்சு சுதந்திரம், பெண்கள், அடிமைகளுக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தபோதும் பொதுவாக குடியுரிமைகளுக்கு மதிப்பு ஆகியவற்றை நிலைநாட்டியது. பேரரசின் ஈரவை நாடாளுமன்றம் அக்காலத்தில் அத்தனை பழக்கமில்லாத மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தது. இதனால் கொள்கையளவில் அரசில் மன்னரின் பங்கு குறித்து பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மன்னர் பெட்ரோவிற்கும் பிணக்குகள் எழுந்த வண்ணம் இருந்தன. 1828இல் எழுந்த சிஸ்பிளாட்டின் போரையடுத்து பிரேசிலின் ஒரு மாநிலம் (தற்போதைய உருகுவை) பிரிந்தது. போர்த்துகலிற்கு எதிராகப் போராடி பிரேசிலின் விடுதலைக்கு வித்திட்டபோதும் பெட்ரோ 1826இல் போர்த்துகல் மன்னரானார். தனது போர்த்துகல் முடியாட்சியை மூத்த மகளுக்காகத் துறந்தார். இரண்டாண்டுகள் கழித்து பெட்ரோவின் தம்பி அவளிடமிருந்து அரியணையை பறித்துக் கொண்டான். பிரேசில்,போர்த்துகல் இரு பிரச்சினைகளையும் இணைந்து கவனிக்க இயலாது ஏப்ரல் 7, 1831இல் தமது பிரேசில் பதவியைத் துறந்து தமது மகளின் ஆட்சியை மீட்க ஐரோப்பா திரும்பினார்.
முதலாம் பெட்ரோவின் வாரிசு இரண்டாம் பெட்ரோவிற்கு ஐந்து அகவையே நிரம்பிய &இருந்தது. எனவே முடியாட்சி வலுவிழந்தது; எனவே அரசியல் பிணக்குகளால் மண்டலங்களுக்கிடையே உள்நாட்டுப் போர் எழுந்தது. பிரிந்து வந்த இராச்சியத்தை அகவைக்கு வந்தவுடன் வரித்துக்கொண்ட இரண்டாம் பெட்ரோ அமைதியை நிலைநாட்டி நிலைத்த அரசியலை மீட்டார். மூன்று பன்னாட்டு சண்டைகளில் (பிளாட்டைன் போர், உருகுவை போர், பராகுவை போர்) வெற்றி பெற்று பன்னாட்டு செல்வாக்கை கூட்டினார். பொருளியல் வளர்ச்சியையும் செல்வத் திரட்டையும் அடுத்து பல ஐரோப்பாவிலிருந்து சீர்திருத்தத் திருச்சபையினரும் யூதர்களும் வரலாயினர். முன்னதாக பரவலாகவிருந்த அடிமைத்தனம் படிப்படியாக சட்ட தீர்திருத்தங்கள் மூலமாக குறைக்கப்பட்டது. 18888இல் முழுவதுமாக ஒழிக்கப்பட்டது. இக்காலத்தில் நிகழ்த்து கலைகள், இலக்கியம் மற்றும் நாடகங்கள் வளர்ச்சியடைந்தன. ஐரோப்பிய நாகரித்தினை ஒட்டியமைந்தாலும் உள்நாட்டு பண்பாட்டைத் தழுவி ஓர் தனி பிரேசிலிய பண்பாட்டுக் கூறு உருவாக்கப்பட்டது.
இரண்டாம் பெட்ரோவின் கடைசி நாப்பதாண்டு காலமும் அமைதியாகவும் வளர்முகமாகவும் இருந்தபோதும் தனது வாழ்நாளுக்குப் பிறகு முடியாட்சி தொடர்வதை அவர் விரும்பவில்லை. அடுத்த வாரிசாக அவரது மகள் இசபெல் இருந்தாள்; அஒரோ அவரது குடும்பமோ பெண்ணை மன்னராக்க விரும்பவில்லை. 58 ஆண்டுகள் ஆட்சிக்குப் பின்னர் நவம்பர் 15, 1889இல் இராணுவத் தலைவர்களால் நிகழ்த்தப்பட்ட ஆட்சி கையகப்படுத்தலில் முடியாட்சி முடிவுக்கு வந்தது.
மேற்சான்றுகள்
- Barman 1988, பக். 72.
- Viana 1994, பக். 408–408.
- Barman 1988, பக். 96.
உசாத்துணை
- Barman, Roderick J. (1988). Brazil: The Forging of a Nation, 1798–1852. Stanford: Stanford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8047-1437-2.
- Barman, Roderick J. (1999). Citizen Emperor: Pedro II and the Making of Brazil, 1825–1891. Stanford: Stanford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8047-3510-0.
- Viana, Hélio (1994) (in Portuguese). História do Brasil: período colonial, monarquia e república (15th ). São Paulo: Melhoramentos. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-85-06-01999-3.