பிரேசிலிய நாட்டுப் பண்

"பிரேசிலிய நாட்டுப்பண்" (போர்த்துக்கீசம்: இனோ நேசியோனல் பிரேசிலீரோ) 1831இல் பிரான்சிஸ்கோ மானுவல் டா சில்வாவால் இசையமைக்கப்பட்டது. குறைந்தது அலுவல்முறையல்லாத இரு பாடல்களாவது இந்த இசைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளன;1922இலிலிருந்து தான் குடியரசுத் தலைவர் எபிடாசியோ பெசோவா ஆணைப்படி அலுவல்முறையான வரையறுக்கப்பட்ட பாடல் பயன்படுத்தப்படுகிறது. 1909இல் ஓசோரியோ டுக்-எசுட்ராடாவால் எழுதப்பட்ட இப்பாடல் பல மாறுதல்களுக்குப் பிறகு ஏற்கப்பட்டது.

இனோ நேசியோனல் பிரேசிலீரோ
ஆங்கிலம்:பிரேசிலிய நாட்டுப் பண்
இகுசு அரண்மனை மீது பிரேசிலின் கொடி பறக்கிறது (அக்டோபர் 2008)
நாடு பிரேசில்
இயற்றியவர்ஓசோரியோ டுக்-எசுட்ராடா, 1909
இசைபிரான்சிஸ்கோ மானுவல் டா சில்வா, 1831
சேர்க்கப்பட்டது1831இல் பிரேசில் பேரரசு போதும் 1890இல் பிரேசில் கூட்டரசு குடியரசிலும்
இசை மாதிரி
இனோ நேசியோனல் பிரேசிலீரோ (கருவியிசை)

நாட்டுப் பண்ணின் வரிகள் பிரான்சிய பாணியில் அமைந்துள்ளது; உள்ளடக்கம் காதல்வயமாக உள்ளது.[1]

மேற்சான்றுகள்

  1. Você entende o Hino Nacional Brasileiro? - Só Português (in Portuguese)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.