பிராந்தி
பிராந்தி (Brandy) என்பது காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைப் பழச்சாறுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை மதுபானம் ஆகும். இது பொதுவாக 30 முதல் 60 சதவிகிதம் மதுசார அளவு கொண்ட இரவு நேர உணவுப் பயன்பாட்டின் போது அருந்தப்படும் மது பானம் ஆகும்.
திராட்சை பழத்தைத் தவிர இதர பழங்களைக் கொண்டும் பிராந்தியானது அரிதாக தயாரிக்கப்படுகிறது. அதனை ஏக்சு-டி-வீ என்கின்றனர்.
சில நாடுகளில் நறுமண வேதிபொருட்களும், நிறமிகளும் காய்ச்சி வடிக்கப்பட்ட மதுசாரத்துடன் சேர்க்கப்பட்ட பானத்தையே பிராந்தி என்கின்றனர்.

வரலாறு
பிராந்தி தயாரிப்பு என்பது காய்ச்சி வடிக்கும் தொழிற்நுட்பத்தோடு நெருங்கிய தொடர்புடையது. இது 12ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு 14ஆம் நூற்றாண்டில் மிகப் பிரபலமடைந்தது. மர பீப்பாய்களில் அடைக்கப்பட்டு நொதிக்கவைக்கும் போது அதன் சுவை அதிகரிப்பதாக் கண்டறியப்பட்ட பின் பிராந்தி தயாரிப்பு பொருளாதார அளவில் பெரும் வளர்ச்சி அடைந்தது.
வகைகள்

- திராட்சை பிராந்தி
- பழ பிராந்தி (ஆப்பிள், செர்ரி, போன்ற பழச்சாற்றில் தயாரிக்கப்படுவது)
- போமேசு அல்லது மேக் பிராந்தி (திராட்சை தோல் மற்றும் கொட்டைகள் மூலம் தயாரிக்கப்படுவது)