பிரதாப் சந்திர சாரங்கி

பிரதாப் சந்திர சாரங்கி (ஆங்கிலம்:Pratap Chandra Sarangi) (பிறப்பு: 4 ஜன 1955), என்பவர் ஒடிசா பாலேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதியாவார். பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். ஒடிசா சட்டமன்றத்தில் 2004 மற்றும் 2009 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நீள்கிரி தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டார்.[1] 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் பாலேஸ்வர் தொகுதியிலிருந்து பாஜக சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2] மீண்டும் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் அதே பாலேஸ்வர் தொகுதியிலிருந்து பாஜக சார்பாகப் போட்டியிட்டு 12956 வாக்குகள் வித்தியாசத்தில் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த ரபீந்திர குமார் ஜெனாவை வென்றார்.[3]

பிரதாப் சந்திர சாரங்கி
நாடாளுமன்ற உறுப்பினர் பாலேஸ்வர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் ரபீந்திர குமார் ஜெனா
உறுப்பினர்: ஒடிசாவின் சட்டமன்றம்நீள்கிரி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2004–2014
முன்னவர் பிரதிப்தா பாண்டா
பின்வந்தவர் சுகந்தா குமார் நாயக்
தனிநபர் தகவல்
பிறப்பு 4 சனவரி 1955 (1955-01-04)
கோபிநாதபூர், பாலேஸ்வர், ஒடிசா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் உட்கல் பல்கலைக்கழகம்

இந்திய அரசின் இணையமைச்சராக

இவர் 31 மே 2019 அன்று நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு & மீன் வளத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4]

இளமைக் காலமும் கல்வியும்

1955 ஜனவரி மாதம் நான்காம் தேதி பாலேஸ்வர் மாவட்ட கோபிநாதபூரில் பிரதாப் சாரங்கி ஒரு பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். 1975 இல் உட்கல் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள பாலேஸ்வர் பகீர் மோகன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.[5].

சிறுவயது முதலே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு ராமகிருஷ்ண மடத்தில் சன்னியாசம் பெறவிரும்பினார். ஆனால் இவரின் தாயாரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி கல்கத்தாவிலுள்ள ராமகிருஷ்ண மடம் இவரைத் திருப்பி அனுப்பியது. அதன்பின்னர் கிராமத்தில் பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருகிறார்.[6]

சமூகச் செயல்பாடு

பாலேஸ்வர் மற்றும் மயூர்பஞ்சு மாவட்டங்களிலுள்ள பழங்குடியினர் கிராமங்களில் சமர் கரா கேந்திரா என்ற பெயரில் பல பள்ளிகளைத் திறந்துள்ளார்.[7]

மேற்கோள்கள்

  1. "Shri Pratap Chandra Sarangi Profile". Naveen Patnaik, Chief Minister of Odisha website. பார்த்த நாள் 2014-05-25.
  2. "'No clash between Modi wave and my image': Pratap Sarangi". The Times of India (May 23, 2019). பார்த்த நாள் 2019-05-23.
  3. "'Balasore Lok Sabha election results 2019 Odisha: BJP's Pratap Sarangi defeats BJD's Rabindra Jena': Pratap Sarangi". DNA India (April 12, 2014). பார்த்த நாள் 2014-05-25.
  4. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here" (en).
  5. "Shri Pratap Chandra Sarangi Profile". My neta info. பார்த்த நாள் 2019-04-26.
  6. "people-are-fed-up-with-the-bjd-hot-seat-pratap-chandra-sarangi-bjp-leader". The Telegraph (October 7, 2017). பார்த்த நாள் 2019-04-29.
  7. "Shri Pratap Chandra Sarangi Profile". Naveen Patnaik, Chief Minister of Odisha website. பார்த்த நாள் 2014-05-25.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.