பிரசாதம்

பிரசாதம் (Prasad or Prasada or Pradasadam}(Hindustani pronunciation: [prəsaːd̪] என்பது இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும் தூய்மையான பல்வகையான உணவுப் பொருட்கள், பூக்கள், துளசி போன்ற இலைகளை பக்தர்களுக்கு விநியோகம் செய்வது ஆகும். பக்தர்களுக்கு பிரசாதம் தரும் வழக்கத்தை சீக்கியர்கள் தாங்கள் வழிபடும் இடங்களில் மேற்கொள்கின்றனர். இந்துக்கள் தங்கள் வீடுகளிலும் சுவாமிக்குப் படைக்கப்பட்ட நெய்வேத்தியத்தை பிறர்க்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.[1]பகவானுக்குப் படைக்கப்பட்ட உணவை பிறரிடம் பகிர்ந்து உண்ண வேண்டும் என பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் உரைத்துள்ளார்.[2][3]

சிவன் கோயில்களில் மட்டும் ஈஸ்வரனுக்குப் படைக்கப்பட்ட நெய்வேத்தியத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதில்லை.

பிரசாத வகைகள்-படக்காட்சிகள்

மேற்கோள்கள்

  1. Glossary of Sanskrit Terms in Integral Yoga Literature
  2. Bhagavad-Gita 3:13
  3. Bhagavad-Gita 9:27

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.