பியூரான் (விண்கலம்)

பியூரான் விண்கலம் என்பது (உருசியம்: Бура́н, IPA: [bʊˈran], பனிப்புயல்) வடிவமைப்பிலும் செயல்பாட்டிலும் அமெரிக்காவின் விண்ணோடத்தை ஒத்த சோவியத் யூனியனின் சுற்றுப்பாதை வாகனமாகும். 1988-ஆம் ஆண்டில் மனிதரற்ற சோதனை பறத்தலுக்கு உட்படுத்தப்பட்டது; இதன்மூலம், விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரே சோவியத் விண்ணோடமாக இது திகழ்கிறது. சோவியத் யூனியனின் பிளவுக்குப் பிறகு, 1993-ஆம் ஆண்டில் பியூரான் விண்கல மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டது. பியூரான் விண்கலம், சோவியத் விண்ணோடமாக கருதப்பட்டது; இதன் வானூர்தி மட்டுமே மறுபயன்பாட்டுக்கு உகந்ததாகும் (உண்மையில், மறுபடியும் இது பறத்தலுக்கு பயன்படுத்தப்படவில்லை). விண்கலத்தின் முக்கியமான பகுதி - ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படக்கூடிய சக்திவாய்ந்த ஏவூர்தி பொறி (எனெர்ஜியா).

பியூரான்
Буран

ஏவுதளத்தில் பியூரான்
நாடு சோவியத் ஒன்றியம்
Named after"பனிப்புயல்"[1]
முதல் பயணம்1K1
நவம்பர் 15, 1988[1]
கடைசிப் பயணம்1K1
நவம்பர் 15,1988[1]
திட்டங்களின் எண்ணிக்கை1[1]
பயணிகள்0[1]
விண்ணில் செலவழித்த நேரம்3 மணிநேரம்
சுற்றுகளின் எண்ணிக்கை2[1]
Statusதிட்டம் கைவிடப்பட்டது; 2002-இல் பணிமனை இடிபாட்டில் ஒரு விண்கலம் அழிந்தது, இரு விண்கலங்கள் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. [2]

பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தின் விமானப் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பியூரான் விண்கலம் (பறத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டது), 2002-ஆம் ஆண்டில் பணிமனை இடிந்து விழுந்ததில் முற்றிலும் சேதமானது.[3]

குறிப்புதவிகள்

  1. "Buran". NASA (12 November 1997). மூல முகவரியிலிருந்து 4 August 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-08-15.; Buran at the Wayback Machine (archived சனவரி 28, 2008).
  2. Eight feared dead in Baikonur hangar collapse, RSpaceflkight Now.
  3. "Buran". Russian Space Web (2012-10-15). பார்த்த நாள் 2013-09-28. "2002 May 12: The flight version of the Buran orbiter is destroyed in the roof collapse at Site 112 in Baikonur."
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.