பியூட்டர்

பியூட்டர் (Pewter) தகரம், நாகம், அந்திமனி, செம்பு, விசுமது என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இது வலிமையானதாகவும் பாரம் குறைந்ததாகவும் காணப்படும்.

பியூட்டர் தட்டு
பியூட்டர் பூச்சாடி
பியூட்டர் துண்டுகள்

பொதுவாக பியூட்டரில் 85–99% தகரமும் நாகம், அந்திமனி, செம்பு, விசுமது முதலானவற்றைக் கொண்டும் காணப்படும். இது குறைந்த உருகு நிலையை உடையது. கலப்புலோகக் கூறுகளின் உண்மையான அளவு விகிதத்திற்கு ஏற்ப இது 170–230 °C (338–446°F), வரை மாறுபடும்.[1] .[2]

பயன்பாடுகள்

நீர்த் திருகுபிடி, தட்டுகள், வாகனங்களின் பிஸ்டன், முசலம் முதலானவை தயாரிக்கப் பயன்படும்.

மேற்கோள்கள்

  1. Campbell 2006, p. 207.
  2. Skeat 1893, pp. 438–439.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.