பி. வில்சன்

பி. வில்சன் (ஆங்கிலம்:Puspanathan Wilson) என்பவர் தமிழகத்தின் முன்னாள் கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞராவார். இவர் 2019 ஜூன் மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.[1]

இளமைக் காலம்

வில்சன் சென்னையில் பிறந்து, ஆசான் நினைவு மேன்னிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பைக் கற்றார். லயோலாக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டமும், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். 1989 ஆம் ஆண்டு வழக்குரைஞராக [இந்திய வழக்குரைஞர் கழகம்|இந்திய வழக்குரைஞர் கழகத்தில்]] பதிவு செய்தார். தொடக்கக் காலத்தில் தமிழகத்தின் முன்னாள் அரசுத் தலைமை வழக்குரைஞர் கே.வி. வேங்கடபதியிடம் பணியாற்றி, பின்னர் தனியாக உரிமையியல் வழக்குகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடி வந்தார். 2008 ஆகஸ்டில் கூடுதல் தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞராகப் பதிவியேற்றார்.[2][3] 2012 ஆகஸ்டில் தமிழகம், கேரளம், ஆந்திரா மற்றும் கர்நாடக உள்ளிட தென்மாநில உயர்நீதிமன்றங்களில் இந்திய அரசின் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞராகப் பதிவியேற்றார்.[4] பின்னர் மத்தியில் ஆட்சி மாற்றத்தை அடுத்து 2014 இல் பதவி விலகினார்.

முக்கிய வழக்குகள்

இவர் தமிழக அரசின் சார்பாகப் பல முக்கிய வழக்குகளில் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். சமச்சீர்க் கல்வி, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் போன்ற வழக்குகளில் முக்கிய பங்காற்றினார்.[5][6] தமிழகத்தின் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மறைவின் போது உடலை மெரினாவில் அடக்கம் செய்யக் கோரிய வழக்கில் திமுகவின் சார்பாக வழக்காடி வென்றவர்.


மேற்கோள்கள்

  1. "யார் இந்த வில்சன்? ஸ்டாலின் எம்பி பதவி வழங்கியது ஏன்?". வெப்துனியா. https://tamil.webdunia.com/article/regional-tamil-news/why-did-stalin-give-mp-seat-to-lawyer-p-wilson-reason-revealed-119070100039_1.html. பார்த்த நாள்: 1 July 2019.
  2. "Tamil Nadu / Chennai News : New Additional Advocate-General". The Hindu (2008-08-13). பார்த்த நாள் 2013-10-05.
  3. "Govt advocates in HC resign - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 2013-10-05.
  4. "Centre appoints two additional solicitors general for south India - Times Of India". Articles.timesofindia.indiatimes.com (2012-08-30). பார்த்த நாள் 2013-10-05.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.