பாஸ்கா புகழுரை
பாஸ்கா புகழுரை (இலத்தீன்: Praeconium Paschale) என்னும் பாடல், புனித சனியன்று பாஸ்கா திருவிழிப்பின் போது கத்தோலிக்க திருச்சபையில் பாடப்படும் பாடலாகும். இது திருத்தொண்டராலோ அல்லது குருவாலோ பாஸ்கா தீயையும் திரியையும் மந்திரித்த பிறகு, இறைவாக்கு வழிபாட்டிற்கு முன்பு பாடப்படும். ஆங்கிலிக்கம், லூதரனியம் போன்ற கிறித்தவ உட்பிரிவுகளிலும் இம்முறை உண்டு.

இப்பாடலின் முடிவில் புனித ரோம பேரரசருக்காக (Holy Roman Emperor) வேண்டுதல் செய்வது 1955-வரை வழக்கில் இருந்தது. 1955-இல் செய்யப்பட்ட திருவழிபாட்டு சடங்குகளின் திருத்தங்களில் இது இடம் பெறவில்லை. மாறாக, நாட்டுத் தலைவர்கள் தம் மக்களை நேரிய வழியில் ஆட்சி செய்யவேண்டும் என்னும் கருத்துக்காக இறைவேண்டல் நிகழ்த்தப்பட்டது. 1970-இல் இப்பகுதி முற்றிலுமாக நீக்கப்பட்டது.
பாடல் வரிகள்
தமிழில் | இலத்தீனில் |
---|---|
வானகத் தூதர் அணி மகிழ்வதாக
|
Exsúltet iam angélica turba cælórum: exsúltent divína mystéria:
|