பாஸ் லினக்ஸ்

பாஸ் லினக்சு டெபியன் லினக்ஸிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு லினக்சு வழங்கலாகும். பாஸ் (BOSS) எனும் பெயரானது "இந்திய இயங்குதளத் தீர்வுகள்" என்று பொருள்படும் ஆங்கில வாக்கியமான "Bharat Operating System Solutions" என்பதன் அஃகுப்பெயர் (acronym). இந்தியச்சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த லினக்ஸ் வழங்கல் 18-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் இயங்கும் சிறப்பிணைக்கொண்டுள்ளது. பள்ளிக்குழந்தைகளுக்காக பாஸ் லினக்சை அடிப்படையாககொண்டு எடுபாஸ்(EduBOSS) எனும் பெயருடைய மற்றொரு லினக்சு வழங்கலும் உருவாக்கப்பட்டுள்ளது.

பாஸ் லினக்சு
நிறுவனம்/
விருத்தியாளர்
சிடாக்
இயங்குதளக் குடும்பம் லினக்சு
மூலநிரல் வடிவம் திறந்த மூல மென்பொருள்
பிந்தைய நிலையான பதிப்பு 7.0 திரிஷ்டி / 28.08.2018
கிடைக்கும் மொழிகள் இந்திய மொழிகள்(Indian languages)
Package manager dpkg
கேர்னர்ல் வகை Monolithic kernel, Linux
இயல்பிருப்பு பயனர் இடைமுகம் குனோம்
இணையத்தளம் www.bosslinux.in

பதிப்புகள்

  • பாஸ்-1.0 (தரக்)
  • பாஸ்-2.0 (அனந்த்)
  • பாஸ்-3.0 (தேஜஸ்)
  • பாஸ்-4.0 (சவீர்)
  • பாஸ்-5.0 (அனோகா)
  • பாஸ்-6.0 (அனூப்)
  • பாஸ்-7.0 (திரிஷ்டி)


இந்தியாவில் பயன்படுத்தப்படும் மாநிலங்கள், இடங்கள்

  • கேரளா - பள்ளிக்கான தகவல் தொழில்நுட்பம்(IT for School) என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பள்ளிகளில் எடுபாஸ்(EduBOSS) பயன்படுத்தப்படுகிறது.
  • கேரளா - பாலக்காடு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள நகராட்சி அலுவகம் போன்ற அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது.
  • தமிழ்நாடு - தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணிணிகளில் (சுமார் 9,00,000 மடிக்கணிணிகளில்) பாஸ் லினக்ஸ் நிறுவப்பட்டு பயன்படுத்தப்படவுள்ளது.
  • உத்திரபிரதேசம் - அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது.
  • ஹரியானா - சுமார் 2,600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள 52,000-க்கும் மேற்பட்ட கணிணிகளில் நிறுவப்பட்டு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது.
  • தமிழக அரசு நவம்பர் 9 2011[1]அன்று வெளியிட்டுள்ள அரசாணையின்படி (PDF கோப்பு[2]), தமிழக அரசின் தலைமைச்செயலகத்தில் உள்ள தகவல்தொழில்நுட்பதுறை மற்றும் பிற துறைகளிலும் பாஸ் லினக்சு நிறுவப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது.

வெளி இணைப்புகள்

உசாத்துணைகள்

  1. தமிழக அரசு நவம்பர் 9 2011 அன்று வெளியிட்டுள்ள அரசாணை
  2. தமிழக அரசு நவம்பர் 9 2011 அன்று வெளியிட்டுள்ள அரசாணையின் PDF கோப்பு

=

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.