பால் கறக்கும் எந்திரம்

பால் கறக்கும் எந்திரம் (ஆங்கிலம்:Milking Machine) பாலுக்காக வளர்க்கப்படும் கால்நடைகளில், பாலை கறக்க பயன்படுத்தப்படும் கருவியை, இவ்விதம் அழைப்பர். அதிக கால்நடைகளில் பாலைக் கறக்கவும், பால் கறக்கும் திறனுள்ளவர்கள் தமிழகத்தில் குறைவாக இருப்பதாலும், இக்கருவியின் பயன்பாடு, தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஒரு நிமிடத்தில் 1.5 முதல் 2 லிட்டர் வரை பாலை, இதன் மூலம் கறக்க இயலும். [1]

பால் கறக்கும் எந்திரம் உள்ள பால்மடி
பால் கறக்கும் எந்திரம்: உட்கூறுகள்

பயன்பாட்டு வரைமுறைகள்

வெற்றிடத்தைப் பயன்படத்தி சிறிய கால்வாய்வழியே, காம்பிலிருந்து பாலை சுரக்கச் செய்து, சேகரிக்கும் பாத்திரத்தில் சேர்த்துவிடுகிறது. மேலும் இது காம்புகளை பிடித்து விடுவதால், பாலும், இரத்தமும் ஒரிடத்தில் குவியாமல் சீராகப் பரவியிருக்கச் செய்கிறது. ஆனால் மடியில் எவ்வித வெடிப்புகளோ, காயங்களோ இருக்கக்கூடாது. எருமை, பசுமாடுகளுக்கு ஏற்ப, இதன் வகைகளைப் பயன்படுத்த வேண்டும். தேவையான பயிற்சியைப் பெற்றே, இக்கருவியை பயன்படுத்த வேண்டும். நோய்காலங்களில் இதனை பயன்படுத்தக்கூடாது.

பயன்கள்

எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வண்ணம் வடிவமைப்பை உடையது. அதிக அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. கையாள்வது எளிது. மடியில் உள்ள பால் முழுவதையும் கறக்கக்கூடியது. அதோடு இக்கருவியில் கறக்கும்போது, கன்று குடிப்பது போலவே இருப்பதோடு, பால்மடியில் வலியும் ஏற்படுத்துவதில்லை. பால் வீணாகாமல் தடுக்கப்படுகிறது. காம்பில் கருவியின் அளவீடு 352 மி.மீ. மெர்குரி;எருமைகளுக்கு 400 மி.மீ. மெர்குரி என வேறுபடுகிறது. கைபடாமல் பால் வருவதால், கெட்டுபோகும் நேரம், கையால் கரக்கும் செயலோடு ஒப்பிடும் போது, மிகவும் குறைவு ஆகும்.

எல்லைகள்

பண்ணையின் பால் கறக்கும் கொட்டில், இக்கருவியை பயன்படுத்துவதற்காக, அதன் அமைப்பை மாற்றி அமைக்கவேண்டும். பால் எந்திரத்தின் கடிக்கும் திறன், அதன் வெற்றிட அளவு மற்றும் துடிப்பு அளவைப் பொறுத்தது.ஒவ்வொரு காம்பிலும் செயல்படும். எடை மற்றும் அழுத்த அளவு ஒரே அளவாக இருக்கவேண்டும். அப்போது தான் கறக்கும் பாலின் அளவு சீராக இருக்கும். எனவே காம்புகளில் பொருத்தும் போது எல்லாவற்றிலும் எடை மற்றும் பிடிப்பு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும்.

கால்நடைகளின் சிறுவயது முதலே, இக்கருவியினால் பால்கறப்பிற்கு பழக்க வேண்டும். கையால் கறப்பிற்கு பழகிய கால்நடைகளில், இக்கருவியை பயன்படுத்த இயலாது எனலாம். குறிப்பாக, எருமையை நன்கு பழக்கப்படுத்த வேண்டும். எருமை பயந்தாலோ, சரியாகப் பொருத்தாமல் விட்டாலோ, வலி ஏற்பட்டாலோ எருமையானது பாலை விடாமல் அடக்கி வைத்துக் கொள்வதால், உற்பத்திக் குறைய வாய்ப்புள்ளது.

சினை மாடுகள், வெப்பமான இக்கருவியைக் கொண்டு, பால் கறப்பதை விரும்புவதில்லை. ஏனெனில், அதன் சிறு இரைச்சல், ஒரு சில கால்நடைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். இது போன்ற நிலைகளில், முதலில் கையினால் பீய்ச்சவேண்டும். அப்பொழுது அருகில் இரைச்சலிடும் இக்கருவியை வைத்துக்கொண்டால், இவ்வொலிக்கு பழகி விடும். நாளடைவில், இக்கருவியைப் பயன்படுத்துவதில் தடைஏற்படாது.

ஊடகங்கள்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.