பாலன்பூர்

பாலன்பூர் (Palanpur), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின், பனஸ்கந்தா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சியாகும். இந்தியாவின் வைரநகரம் மற்றும் பூக்கள் நகரம் என்ற பெருமைக்குரியது. பனஸ்கந்தா கூட்டுறவு பால் பண்ண நாள் ஒன்றுக்கு 35 இலட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது.

பாலன்பூர்
પાલનપુર
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்பனஸ்கந்தா
ஏற்றம்209
மக்கள்தொகை (2011)
  மொத்தம்140
மொழிகள்
  அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN385 001
தொலைபேசி குறியீடு எண்91-2742
வாகனப் பதிவுGJ-8

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பாலன்பூர் நகர மக்கள் தொகை 1,40,344 ஆகும். அதில் ஆண்கள் 53%; பெண்கள் 47% ஆக உள்ளனர்.[1] எழுத்தறிவு விகிதம் 86% ஆகும். ஆறு வயதிற்குட்பட்டவர், மக்கட்தொகையில் 13%ஆக உள்ளனர்.

பாலன்பூர் சமயப் பிரிவினர்
சமயம் விழுக்காடு
இந்துக்கள்
 
95%
இசுலாமியர்
 
02%
சமணர்
 
3.4%
பிறர்†
 
0.6%
Distribution of religions
Includes சீக்கியர்கள் (0.2%), பௌத்தர்கள் (<0.2%).

வணிகம்

பால் பண்ணை, வைரங்களுக்குப் பட்டைத் தீட்டுதல் & மெருகு ஏற்றுதல், சலவைக்கல் பட்டைத் தீட்டுதல் தொழில்கள் அதிகம் உள்ள நகரம்.

போக்குவரத்து வசதிகள்

பாலன்பூர் நகரை இருப்புப் பாதைகள், சாலைகள் ஆகியவற்றின் மூலமும் வான் வழியாகவும், மாநிலத்தின் பிற பகுதிகளையும் நாட்டின் ஏனைய பகுதிகளையும் சென்றடையலாம்.

அருகில் உள்ள இடங்கள்

அருகில் உள்ள நகரங்கள்

மேற்கோள்கள்

  1. http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999%7Carchiveurl=http://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999%7Carchivedate=2004-06-16%7Ctitle= Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)|accessdate=2008-11-01|publisher= Census Commission of India}}

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.