பாறப்புறத்து

பாறப்புறத்து என்னும் புனைபெயர் கொண்ட கெ. ஈசோ மத்தாயி (நவம்பர் 14, 1924-டிசம்பர் 30, 1981) மலையாள சிறுகதை, நாவல் எழுத்தாளர் ஆவார். இருமுறை கேரள அரசின் இலக்கிய அமைப்பின் விருதினைப் பெற்றுள்ளார். இவரின் கதைகள் பல திரைப்படங்களாக வெளியாகியுள்ளன.

கே. இ. மத்தாயி (பாறப்புறத்து)
தொழில் நாவல் எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர்
நாடு  இந்தியா
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
அர நாழிக நேரம், ஆகாசத்திலெ பறவகள், நிணமணிஞ்ஞ கால்பாடுகள், அன்வேஷிச்சு; கண்டெத்தியில்ல, பணிதீராத்த வீடு

வாழ்க்கைக் குறிப்பு

மாவேலிக்கர வட்டத்தில் குன்னம் என்னும் ஊரில் 1924 நவம்பர் 14-ந்‌ குஞ்ஞுநைனா ஈசோ, சோசாம்மை ஆகியோரின் மகனாகப் பிறந்தார். குன்னம் சி.எம்.எஸ். எல்.பி. ஸ்கூள், கவர்ன்மென்ட் மிடில் ஸ்கூள், செட்டிகுளங்ஙர ஹைஸ்கூள் ஆகிய இடங்களில் கல்வி கற்றார். 1944-ல் தன் 19-ஆம் வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். நாடகங்கள் எழுதியிருந்து, மத்தாயி இருபத்தியோரு ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றினார். 1965-ல் இலக்கியக் கழகங்களில் துணைத் தலைவர், தலைவர் பதவிகள் வகித்தார். 1981 டிசம்பர் 31 ஆம் நாள் இறந்தார்.

ஆக்கங்கள்

சிறுகதைகள்

  • பிரகாசதார (1952)
  • ஒரம்மயும் மூன்னு பெண்மக்களும் (1956)
  • குருக்கன் கீவறீத் மரிச்சு (1957)
  • ஆ பூமொட்டு விரிஞ்ஞில்ல (1957)
  • தோக்கும் தூலிகயும் (1959)
  • தினாந்த்யக்குறிப்புகள் (1960)
  • ஜீவிதத்தின்றெ ஆல்பத்தில்நின்னு (1962)
  • நாலாள் நாலுவழி (1965)
  • சூசுன்ன (1968)
  • தெரஞ்ஞெடுத்த கதகள் (1968)
  • கொச்சேச்சியுடெ கல்யாணம் (1969)
  • அளியன் (1974)
  • வழியறியாதெ (1980)
  • கீழடங்ஙல் (1982)

புதினங்கள்

  • நிணமணிஞ்ஞ கால்பாடுகள் (1955)
  • அன்வேஷிச்சு; கண்டெத்தியில்ல (1958)
  • ஆத்யகிரணங்ஙள் (1961)
  • மகனே, நினக்குவேண்டி (1962)
  • பணிதீராத்த வீடு (1964)
  • ஓமன (1965)
  • தேன் வரிக்க (1966)
  • அரநாழிக நேரம் - (1967)
  • வெளிச்சம் குறஞ்ஞ வழிகள் (1968)
  • சந்த (1969)
  • பிரயாணம் (1970)
  • நன்மயுடெ பூக்கள் (1972)
  • வழியம்பலம் (972)
  • அச்சன்றெ காமுகி (1975)
  • தர்மசங்கடம் (1975)
  • அவஸ்தாந்தரம் (1976)
  • மனசுகொண்டு ஒரு மடக்கயாத்ர (1976)
  • ஆகாசத்திலெ பறவகள் (1979)
  • இவனெ ஞான் அறியுன்னில்ல (1979)
  • காணாப்பொன்ன் (1982)

விருதுகள்

சிறுகதை, புதினம் ஆகியவற்றிற்காக பல்வேறு பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். 1966-ல் நாலாள் நாலுவழி[1] என்ற சிறுகதைக்கும், 1971-ல் அரநாழிகநேரம் [2] என்ற புதினத்திற்கும் விருதுகள் பெற்றார்.

சான்றுகள்

  1. "கேரள சாகித்ய அக்காதமி சிறுகதை விருது பெறுவோர்". கேரள சாகித்ய அக்காதமி. பார்த்த நாள் மேய் 15, 2010.
  2. "கேரள சாகித்ய அக்காதமி நோவல் விருது பெற்றோர்". கேரள சாகித்ய அக்காதமி. பார்த்த நாள் மேய் 15, 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.