பார்சுட்டோவைட்டு
பார்சுட்டோவைட்டு (Barstowite) என்பது Pb4[Cl6|CO3]•H2O, என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒற்றைச்சரிவச்சு படிகத்திட்டத்தில் வெண்மை நிறத்துடன் ஒளிபுகும் தன்மை கொண்டதாக இக்கனிமம் காணப்படுகிறது. மோவின் அளவுகோலில் பார்சுட்டோவைட்டு கனிமத்தின் கடினத்தன்மை அளவு 3 என்று கணக்கிடப்படுகிறது. வெண்மையான கீற்றுகளும் விடாப்பிடியான வைரத்தின் பளபளப்பும் இக்கனிமத்தின் பண்புகளாகும்[1].
பார்சுட்டோவைட்டு Barstowite | |
---|---|
![]() கிரீசிலுள்ள லேவ்ரியான் மாவட்ட்த்தின் பாசா இலிமானி பகுதியில் கிடைத்த பார்சுட்டோவைட்டு கனிம்ம். | |
பொதுவானாவை | |
வகை | ஆலைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Pb4[Cl6|CO3]•H2O |
இனங்காணல் | |
நிறம் | வெண்மையும் ஒளிபுகும் தன்மையும் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மோவின் அளவுகோல் வலிமை | 3 |
மிளிர்வு | விடாப்பிடியான மிளிர்வு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஐக்கிய இராச்சியத்தின் கோர்ன்வால் பகுதியிலுள்ள செயிண்ட் எண்டெல்லியன் என்ற குக்கிராமத்தில் பார்சுட்டோவைட்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது. 1947 முதல் 1982 வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்த இரிச்சர்டு டபிள்யூ பார்சுட்டோவ் என்ற கனிமச் சேகரிப்பாளர் நினைவாக இக்கனிமத்திற்கு பார்சுட்டோவைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது[1] (1947–1982), a Cornish mineral collector.[2].