பார் (அளவை)
பார் (bar) என்பது அழுத்ததின் அளவீட்டு அலகு ஆகும். டெசிபார் (decibar, dbar), மில்லிபார் (millibar, mbar, அல்லது mb) என்பன பார் என்னும் அழுத்ததின் பத்தில் ஒரு பகுதி, ஆயிரத்தில் ஒரு பகுதி என்னும் உள்பகுப்பு அளவைகளாகும் (கீழ்வாய் அலகுகளாகும்). இவை SI அளவு முறையில் அமைந்திருக்கவில்லை. ஆனாலும் இவை வளிமண்டல அழுத்தத்துடன் ஒத்திருப்பதால் பல நாடுகளில் இவ்வலகுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. (பார் என்றால் ஆங்கில மொழியில் அழுத்தம் என்று பொருள். பரோமீட்டர் என்பது அழுத்தத்தை அளக்கும் ஒரு கருவி என்று பொருள்படும்)
வரைவிலக்கணம்
- 1 பார் = 100,000 பாஸ்கல்கள் (Pa) = 1,000,000 டைன்/சதுர செ.மீ (dyn/cm², baryeகள்)
- 1 dbar = 0.1 பார் = 10,000 Pa = 100,000 dyn/cm²
- 1 mbar = 0.001 bar = 100 Pa = 1,000 dyn/cm²
வரலாறு
பார் (bar) என்ற சொல் கிரேக்க மொழியில் βάρος (பாரொஸ், baros), அதாவது நிறை ஆகும்.
பார், மில்லிபார் அளவைகள் சேர் நேப்பியர் ஷா (Napier Shaw) என்பவரால் 1909 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இது 1929இலேயே அனைத்து நாடுகளிலும் பயன்பாட்டிற்கு வந்தது.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.