பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம்
பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், திருச்சிராப்பள்ளி (Bharathidasan Institute of Management, Tiruchirappalli) அல்லது (BIM-Trichy) 1984ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்ட தனித்த மேலாண்மைக் கல்வி நிறுவனமாகும். இந்த நிறுவனம் முழுநேர வணிக நிர்வாகத்தில் பட்டமேற்படிப்பையும் (எம்பிஏ) முகவர் படிப்புகளையும் பல மேலாளர் கல்வித் திட்டங்களையும் வழங்குகிறது.
![]() | |
வகை | பொதுத்துறைப் பள்ளி, வணிகக்கல்விப் பள்ளி |
---|---|
உருவாக்கம் | 1984 |
அமைவிடம் | திருச்சி, தமிழ்நாடு, இந்தியா 10°44′37″N 78°47′38″E |
வளாகம் | எம்எச்டி வளாகம், பிஎச்ஈஎல் வளாகம் |
இணையத்தளம் | bim.edu |
வளாகம்
தனது துவக்கத்திலிருந்தே பாரத மிகு மின் நிறுவன வளாகத்திலிருந்து இயங்குகிறது. அந்த வளாகத்தில் உள்ள எம்எச்டி வளாகத்தில் வகுப்புகளும் மாணவர் விடுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. நகரில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்காக கஜமலையில் உள்ள 12 ஏக்கரா நிலத்தில் இதன் சொந்த மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ₹50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இவை 2011யில் முடிவடையும் என எதிர்பார்க்கபடுகிறது.[1]