பாபுராம் பட்டாராய்
பாபுராம் பட்டாராய் (Baburam Bhattarai, பிறப்பு: மே 26 1954) நேபாள அரசியல்வாதி ஆவார். இவர் ஆகத்து 29 ஆம் நாள் நேபாளத்தின் 35வது பிரதமராகப் பதவியேற்றார்[1]. இவர் நேபாள கம்யுனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் மூத்த உறுப்பினரும், பிரதித் தலைவரும் ஆவார். இக்கட்சி 1996 ஆம் ஆண்டில் அப்போதைய மன்னராட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கிப் போராடி மன்னராட்சியை இல்லாதொழித்து மக்களாட்சியைக் கொண்டுவந்தது. 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாபுராம் பட்டாராய் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பாபுராம் பட்டாராய் Baburam Bhattarai बाबुराम भट्टराई | |
---|---|
![]() | |
நேபாளப் பிரதமர் | |
பதவியேற்பு 29 ஆகத்து 2011 | |
குடியரசுத் தலைவர் | ராம் பரன் யாதவ் |
முன்னவர் | சாலா நாத் கனால் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 26 மே 1954 பெல்பாஸ், நேபாளம் |
அரசியல் கட்சி | நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) |
படித்த கல்வி நிறுவனங்கள் | திரிபுவன் பல்கலைக்கழகம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் |
மேற்கோள்கள்
- Deputy leader of former Maoist rebels sworn in as Nepal’s new prime minister, வாசிங்டன் போஸ்ட், ஆகத்து 29, 2011
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.