பாசுபோபைலைட்டு
பாசுபோபைலைட்டு (Phosphophyllite) என்பது Zn2Fe(PO4)2•4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு நீரேறிய துத்தநாக பாசுபேட்டு கனிமமாகும். பாசுபேட்டு மற்றும் இலை என்ற பொருளைக் குறிக்கும் பைலான் என்ற கிரேக்க சொல் ஆகிய கனிமத்தின் உட்கூறுகளை அடிப்படையாக வைத்தே கனிமத்திற்கு பாசுபோபைலைட்டு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. படிக்க் கட்டமைப்பின் பிளவு இலை போல உள்ளது என்பது இங்கு கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது [2]. கனிமத்தின் மென்மையான நீலப்பச்சை நிறத்திற்காகவும் அரிதாக்க் கிடைப்பதாலும் சேகரிப்பாளர்கள் இதற்கு மிகவும் அதிக விலை கருதினர். உடையக்கூடியதாகவும் நொறுங்கக் கூடியதாகவும் இருப்பதால் பாசுபோபைலைட்டு அரிதாகவே துண்டாக்கப்படுகிறது. பெரிய படிகங்கள் மிகவும் மதிப்புமிக்கவையாக்க் கருதப்படுகின்றன [3].
பாசுபோபைலைட்டு Phosphophyllite | |
---|---|
![]() | |
பொதுவானாவை | |
வகை | பாசுபேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | hydrated zinc phosphate Zn2Fe(PO4)2•4H2O |
இனங்காணல் | |
மோலார் நிறை | 448.40 கி/மோல் |
நிறம் | நீலப்பச்சை மற்றும் நிறமற்றும் |
படிக இயல்பு | பட்டகத்தன்மை |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு |
இரட்டைப் படிகமுறல் | பொதுவானது |
பிளப்பு | [100] சரியானது [010] தனித்துவம் [102] தனித்துவம் |
முறிவு | சங்குருவம் |
மோவின் அளவுகோல் வலிமை | 3.5 |
மிளிர்வு | கண்னாடி பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 3.1 |
ஒளிவிலகல் எண் | 1.59-1.62 |
இரட்டை ஒளிவிலகல் | 0.021 |
பொதுவான மாசுகள் | மாங்கனீசு |
மேற்கோள்கள் | [1] |
பொலிவியாவின் போடோசி நகரத்திலிருந்து நேர்த்தியான பாசுபோபைலைட்டு கனிமப் படிகங்கள் கிடைத்தன. ஆனால் இப்போது அங்கு கிடைப்பதில்லை. அமெரிக்காவின் நியூ ஆம்சையர், செருமனியின் பவேரியா பகுதிகள் தற்போதைய பிற மூலங்களாகும். சால்கோபைலைட்டு, டிரைபைலைட்டு கனிமங்களுடன் சேர்ந்து பாசுபோபைலைட்டும் கிடைக்கிறது [4].

மேற்கோள்கள்
- Mineralienatlas
- "Phosphophyllite". பார்த்த நாள் 2006-12-16.
- Hall, Cally (1994). Gemstones. Great Britain: Dorling Kindersley. பக். 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7513-1026-3.
- "The mineral phosphophyllite". Amethyst Galleries, Inc. மூல முகவரியிலிருந்து 2006-10-17 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-12-16.