பழ வௌவால்
பழ வௌவால் (fruit bats) அல்லது பறக்கும் நரி (flying fox) என்றழைக்கப்படும் வௌவால்கள் டீரோபஸ் ( Pteropus)எனும் அறிவியல் பெயர் உடையவை. இவையே உலகின் பெரிய வௌவால்கள். இவை இந்தியத் துணைக்கண்டம், கிழக்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன. கண்டறியப்பட்ட மிகப்பழைய பழ வௌவால் புதைபடிமங்களுக்கும் இன்று காணப்படும் உயிரினங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
பழ வௌவால் | |
---|---|
பறக்கும் நரி (Pteropus vampyrus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பிகள் |
வகுப்பு: | பாலூட்டிகள் |
வரிசை: | வௌவால்கள் |
துணைவரிசை: | பெரும் வௌவால்கள் |
குடும்பம்: | இறக்கைக் காலிகள் |
பேரினம்: | Pteropus Erxleben, 1777 |
எல்லா பழவௌவால் சிற்றினங்களும் மகரந்தம், பழம், மலர்த்தேன் ஆகியவற்றை மட்டுமே உண்கின்றன. எனவே இவை இந்த உணவு காணப்படும் பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன.
பெரும்பாலான பழ வௌவால் சிற்றினங்கள் அழியும் நிலையில் உள்ளன. வாழிடம் அழிப்பு, மருந்தாகப் பயன்படுத்துதல் மற்றும் விவசாயிகள் இவற்றைத் தங்கள் எதிரிகளாக நினைப்பது ஆகியவை இதற்கான காரணங்கள்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.