பல்லேலக்கா

ஷங்கர் அவர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் சிரேயா சரன் நடிப்பில் வெளிவந்த தமிழ் படமான சிவாஜி:தி பாஸ் படத்தில் இடம்பெற்ற பாடலே பல்லேலக்கா. இப்பாடலின் வரிகளை நா.முத்துக்குமார் எழுத ,ஏ.ஆர்.ரகுமான் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,ரெய்ஹானா மற்றும் பென்னி பாடினார்கள்.

"பல்லேலக்கா"
ஒலிச்சுவடு பாடலை பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
ரெய்ஹானா
பென்னி

சிவாஜி:தி பாஸ் திரைப்படத்திலிருந்து

வெளிவந்த ஆண்டு ஏப்ரல் 2, 2007
வகை ஒலிச்சுவடு
பாடும் நேரம் 6.08
பாடலாசிரியர் ஏ. ஆர். ரகுமான், நா.முத்துக்குமார்
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்
சிவாஜி:தி பாஸ் பாடல்வரிசை
"பல்லேலக்கா"
(1)
ஸ்டைல்

இப்பாடல் இந்தியாவில் படமாக்கப்பட்டது. இப்பாடலில் நயன்தாரா கௌரவ தோற்றத்தில் தோன்றி நடனம் புரிந்தார். இந்த பாடலில் செல்போனின் நச்சரிப்பை மறந்து கொஞ்சும் சிறுவனின் உச்சரிப்பை கேட்போம் என்ற வரி ஒலிக்கும்பொழுது, திரையில் இயக்குனர் சங்கர், கவிஞர் வாலி மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் மூவரும் தோன்றுவர்.இது இயக்குனர் சங்கர் அவர்கள் தன் படத்தில் தோன்றும் இரண்டாவது முறை.

இப்பாடல் சிவாஜி(ரஜினிகாந்த்) அமெரிக்காவிலிருந்து திரும்பியப்பின் அவருக்கு ஏற்பாடு செய்யும் விழாவில் பெண்கள் அவரை ஆட அழைக்கின்றனர். அப்பொழுது அங்கிருந்த ஆங்கில பாடலை நிறுத்த சொல்லும் ரஜினி,ஓர் தமிழ் பாடலை ஒளிபரப்ப சொல்கிறார். அடுத்த வினாடி,நயன்தாரா திரையில் தோன்ற இப்பாடல் ஆரம்பமாகும்.

இதையும் பாருங்களேன்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.