பல் வேர்க் கால்வாய்

பல் வேர்க்குழி (root canal) என்பது பல்லின் வேருக்குள் காணப்படும் இடைவெளியாகும். இது பல்லுக்குள் இயற்கையாகவே உருவாகும் இடைவெளியின் ஒரு பகுதியாகும், இது பற்கூழ் (மச்சை) அறை, (பல்லின் குறுக்குப் பகுதிக்குள்), பிரதான கால்வாய்(கள்) மற்றும் பல் வேர்க் கால்வாய்களை ஒன்றுடனொன்று அல்லது வேரின் மேற்பகுதியுடன் இணைக்கக்கூடிய அதிக சிக்கலான உடற்கூற்றுக் கிளைகளைக் கொண்டிருக்கும்.

பல் வேர்க் கால்வாய்
விளக்கங்கள்
இலத்தீன்canalis radicis dentis
அடையாளங்காட்டிகள்
TAA05.1.03.049
FMA55674
உடற்கூற்றியல்
பல்வேர்க் குழி செய்முறை: சொத்தையான அல்லது உடைந்த பல், துளைத்தலும் துப்புரவாக்கலும், நுண் அராவிகள் மூலம் அராவுதல், மீள்மத்தினால் நிரப்பப்படுதலும் பல் தலை பொருத்தலும்

துணைக் கால்வாய்கள் எனக் குறிப்பிடப்படும் சிறிய கிளைகள் அநேகமாக வேரின் முடிவில் (முனை) காணப்படுமாயினும், வேரின் நீளம் வழியே எங்கேனும் சந்திக்கக்கூடும். ஒவ்வொரு வேரிற்குள்ளும் ஒன்று அல்லது இரண்டு பிரதான கால்வாய்கள் இருக்கக்கூடும். சில பற்கள் மற்றவற்றைவிட அதிக வேறுபாடான உட்புற உடற்கூற்றியலைக் கொண்டிருக்கும். இந்த இடைவெளியானது அதிக ரத்தக் கலன்களுள்ள, இளகிய இணைய இழையமான பற்கூழால் நிரப்பப்படுகிறது.

பற்கூழ் என்பது இழையமாகும். இதன்மூலமே பல்லின் இழையப் பகுதி ஆக்கப்படுகிறது. இரண்டாம்நிலை பற்களின் உருவாக்கம் (நிரந்தரப் பற்கள்) அவை வாய்க்குள் உருவாகி 1-2 ஆண்டுகளின் பின்னர் பூர்த்தியடைகின்றது. இது உணர்வு அங்கமாக இரண்டாம்நிலைப் பங்கை ஏற்கிறது.

பல் வேர்க் கால்வாய் என்பது பற் சிகிச்சையான பற்கூழ் நோய் மருத்துவத்துக்கான பேச்சுவழக்கச் சொல்லாகும், இச்சிகிச்சையில் பற்கூழ் சுத்தமாக்கப்பட்டு அகற்றப்பட்டு, இடைவெளி தொற்றுநீக்கப்பட்டு, பின்னர் நிரப்பப்படுகிறது.

அமைப்பு

பல்லின் மையத்தில் ஒரு துவாரப் பகுதி உள்ளது. இங்கே பற்கூழ் அல்லது நரம்பு எனப்படுகின்ற மென்மையான இழையம் இருக்கிறது. இந்த துவாரப் பகுதியில், பல்லின் குறுக்குப் பகுதியில் (ஒப்பீட்டளவில்) அகன்ற இடம் உள்ளது. இது பற்கூழ் அறை எனப்படுகிறது. இந்த அறையானது வேரின் நுனியுடன் ஒடுக்கமான கால்வாய்(கள்) மூலமாக இணைக்கப்படுகிறது. ஆகவேதான் இது "பல் வேர்க் கால்வாய்" என அழைக்கப்படுகின்றது. மனிதப் பற்கள், வாயின் பின்புறம் நோக்கிச் செல்கையில் அதிக எண்ணிக்கையான கால்வாய்களைக் கொண்டிருக்கும் விதமாக, வழக்கமாக ஒன்று முதல் நான்கு வரையிலான கால்வாய்களைக் கொண்டிருக்கின்றன.[1] ஒரு பென்சிலின் கூர் பென்சிலின் நீளம் வரைக்கும் செல்வது போல வேரின் மையத்தினூடாக இந்தக் கால்வாய்கள் செல்கின்றன. பற்கூழானது இரத்தக் கலன்களினூடாக ஊட்டத்தைப் பெறுகின்றது, கெடுதலான நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து எச்சரிக்கை அளிப்பதற்கான சமிக்ஞைகளை மூளையிலிருந்து நரம்புகள் கடத்துகின்றன.

பல்வலி அல்லது உழைவு உள்ள ஒரு நபருக்கு, பல் வேர்க் கால்வாய் சுட்டிக்காட்டப்படலாம். உடனே தகுதியான பல்மருத்துவர் அல்லது கூடுதல் சிறப்பு பற்கூழ் நோய் மருத்துவர் (பல் வேர்க் கால்வாய் சிகிச்சை வல்லுநர்) ஒருவரை காலம் தாழ்த்தாமல் அணுகவேண்டும்.

உசாத்துணை

  1. What are Root Canals? DentalDiseases.org - Root Canal Therapy.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.