பற்சட்ட இருப்புப்பாதை

ஓர் பல் தொடருந்து,பற்சட்ட மற்றும் பற்சக்கர தொடருந்து அல்லது பற்சட்ட இருப்புப் பாதை எனக் குறிப்பிடப்படுவது வழமையான இருப்புப் பாரைகளுக்கிடையே பற்களுடைய பற்சட்டம் அமைந்த இருப்புப் பாதை வழிகள் அல்லது வழியைப் பயன்படுத்தும் தொடருந்துகளாகும்.இத்தகைய தொடருந்து ஒன்று அல்லது மேற்பட்ட பற்சக்கரங்களைக் கொண்டு கீழுள்ள பற்சட்டத்தில் சரியாகப் பதிந்து செல்லும்.இவ்வகை அமைப்பு கூடுதல் சரிவுள்ள மலைப்பாதைகளில் தொடருந்துகள் சென்றுவர ஏதுவாகின்றன.

ஷ்நீபெர்க் பற்சட்ட இருப்புப்பாதை இயக்கி,சாய்ந்த கொதிகலனுடன்,சமநிலை பாதையில்.
பற்சட்ட இருப்புப் பாதை லாமெல்லா முறை பற்சட்டத்தை பயன்படுத்துதல்.
பற்சட்ட மற்றும் பற்சக்கரம் இயங்கும் முறை.

பெரும்பாலான பற்சட்ட தொடருந்துகள் மலைப்பகுதி தொடருந்துகள். இருப்பினும் கூடுதல் சரிவுகள் கொண்ட நகர்பகுதி தொடருந்துகளிலும் டிராம் வண்டிகளிலும் சில நேரங்களில் பயனாகின்றன.

இவ்வகையான முதல் இருப்புப் பாதை இங்கிலாந்தின் மேற்கு யார்க்சயரின் லீட்ஸ் மற்றும் மிடில்டன் இடையேயான மிடில்டன் தொடருந்துவில் அமைக்கப்பட்டது. 1812ஆம் ஆண்டு நீராவி இயக்கி மூலமாக முதல் வணிக போக்குவரத்து துவங்கியது.[1]

மலைப்பாதை ஒன்றில் அமைக்கப்பட்ட முதல் இருப்புப் பாதை அமெரிக்காவின் நியூ ஹாம்சையரில் 1868ஆம் ஆண்டு மவுண்ட் வாஷிங்கடன் காக் இரயில்வேயால் இயக்கப்பட்டது. இந்தியாவில் நீலகிரி மலை இரயில் பாதை 1899 ஆம் ஆண்டு மதராஸ் இரயில்வே நிறுவனத்தால் தமிழகத்தில் துவக்கப்பட்டு இன்றும் நாளுக்கு இருமுறை மேட்டுப்பாளையத்திற்கும் ஊட்டிக்கும் இடையே இயக்கப்பட்டு வருகிறது.


மேற்கோள்கள்

  1. Jehan, David (2003). Rack Railways of Australia (2nd. Edition ). Illawarra Light Railway Museum Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9750452-0-2.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.