பத்மா லட்சுமி

பத்மா பார்வதி லட்சுமி அல்லது லேடி ருஷ்டி (Lady Rushdie[1], பிறப்பு: செப்டம்பர் 1, 1970) ஒரு அமெரிக்க இந்திய நடிகையும், முன்னாள் மாடலும்[2], உணவு நூல் எழுத்தாளரும் ஆவார். இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி ஆவார்.

பத்மா லட்சுமி

இயற் பெயர் பத்மா பார்வதி லட்சுமி
பிறப்பு செப்டம்பர் 1, 1970 (1970-09-01)
கேரளா, இந்தியா
இணையத்தளம் http://www.lakshmifilms.com/

இந்தியாவில் கேரளாவில் பிறந்து சென்னையிலும் பின்னர் கலிபோர்னியாவிலும் வளர்ந்தார். சமையல் கலையில் கைதேர்ந்தவரான இவர் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் தோன்றி சமையல் குறிப்புகளைத் தந்தவர். தற்போது பெண்கள் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்துக்கான தூதுவராகப் பணியாற்றுகிறார்.[3].

மேற்கோள்கள்

  1. Padma Lakshmi
  2. Jess Cartner-Morley, "Beautiful and Damned", The Guardian, 8 April 2006
  3. Padma Lakshmi — Avenue
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.