பதஞ்சலி சாஸ்திரி

மண்டகொளத்தூர் பதஞ்சலி சாஸ்திரி (பி. சனவரி 4, 1889 - தரவில்லை) என்பவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது உச்சி நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நவம்பர் 7, 1951 முதல் சனவரி 3, 1954 வரை இருந்தவர்.[2] தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூரில் பிறந்தார்.[3]

எம். பதஞ்சலி சாஸ்திரி
இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
1951–1954
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 4, 1889(1889-01-04)
மண்டகொளத்தூர், சென்னை மாகாணம்
(தற்போது திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு)[1]
வாழ்க்கை துணைவர்(கள்) எம். காமாட்சி அம்மாள்

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மூத்த சமசுகிருத பண்டிட் கிருஷ்ண சாஸ்திரியின் மகனாக பதஞ்சலி சாஸ்திரி பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து கலையிலும் சட்டத்திலும் பட்டப்படிப்பை முடித்த பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் ஆற்றி வந்தார். சில காலம் கழித்து மார்ச்சு 15, 1939இல் உயர்நீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். திசம்பர் 6, 1947இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் தலைமை நீதிபதியாக நவம்பர் 7, 1951இல் பொறுப்பேற்றார். இப்பதவியில் சனவரி 3, 1954 வரை பணியாற்றினார்.[4]

மேற்கோள்

  1. "Sastri was first Tamilian Supreme Court Chief Justice". The New Indian Express (3 சூலை 2013). பார்த்த நாள் 23 சூலை 2013.
  2. "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.சதாசிவம்". தினமணி (30 சூன் 2013). பார்த்த நாள் சூலை 23, 2013.
  3. "Sastri was first Tamilian Supreme Court Chief Justice". newindianexpress (சூலை 3, 2013). பார்த்த நாள் சூலை 23, 2013.
  4. "M. Patanjali Sastri". supremecourtofindia.nic.in. பார்த்த நாள் 23 சூலை 2013.
நீதித்துறை அலுவல்கள்
முன்னர்
எச். ஜெ. கானியா
இந்தியத் தலைமை நீதிபதி
16 நவம்பர் 1951 3 சனவரி 1954
பின்னர்
மெகர் சாந்த் மகஜன்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.