பண்டாரவளை
பண்டாரவளை | |
![]() ![]() பண்டாரவளை
| |
மாகாணம் - மாவட்டம் |
ஊவா மாகாணம் - பதுளை |
அமைவிடம் | 6.8369°N 80.9856°E |
பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
90.8 ச.கி.மீ - 1230 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் தொகை - மக்களடர்த்தி |
64,657 - 968/ச.கி.மீ |
நகர தந்தை | நலீன் பிரியந்த்த சூரியகே |
பண்டாரவளை (Bandarawela) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ஊவா மாகணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவளை பதுளைக்கு அடுத்தப்படியாக மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். பண்டாரவளை இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் தியதலாவை, எல்லை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. கொழும்பு-கல்முனை பெருந்தெருவிலிருந்து பிரிந்துச் செல்லும் ஏ-16 பெருந்தெரு வழியாகவோ, நுவரெலியாவிலிருந்து ஏ-5 பெருந்தெரு வழியாகவோ வெலிமடையிலிருந்து பீ-44 பெருந்தெரு வழியாகவோ பண்டாரவளையை அடையலம்.
ஆதாரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.