கைக் கணினி

கைக் கணினி (ஆங்கிலம்: Tablet Computer) என்பது ஒரு தொடுதிரை கொண்ட அட்டை வடிவிலான கணினி ஆகும். இதை வரைபட்டிகைக் கணினி என்றும் சொல்லலாம். இதன் உள்ளீடானது ஒரு விரல் நுனியாலோ அல்லது ஒரு எண்முறை பேனாவின் மூலமாகவோ தரப்படும். அவ்வாறு தரப்படும் அந்த உள்ளீடைத் தத்தல் என்று அழைப்பர்.

கைக் கணினி

மலிவு விலைக் கைக் கணினி

35 டாலர்கள் மட்டுமே செலவாகும் படியான சாக்சாட் போன்ற முன்மாதிரிக் கைக் கணினிகள் மூலம் இந்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் கூட அதன் மூலப் பொருள்களின் விலை 47 டாலர்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. ஒரு குழந்தை ஒரு கைக் கணினி திட்டம் (ஒரு.கு.ஒரு.கை.) 100 டாலர்கள் கைக் கணினியை அறிமுகம் செய்துள்ளது. நிகோழசு நெக்குரோபோண்டன், ஒரு.கு.ஒரு.த திட்ட தலைவர், இந்திய ஆய்வாளர்களை இவ்வகையான கைக் கணினிகளை கட்டமைக்க மதராசு தகவல் தொழில்நுட்பத்திற்கு அழைத்துள்ளார்.

இயக்கு தளம்

வழக்கமான கணினிகள் போன்ற தத்தல்கள் பல வகையான இயங்கு தளங்களில் இயங்கக் கூடும். பிரபலமானவை விண்டோஸ், ஐஒஎஸ், ஆண்ட்ராய்டு ஆகும்.

முக்கிய வன்பொருள்

  • மையச் செயற்பகுதி : கைக் கணினியில் x86 or x86-64 கட்டமைப்பு மையச் செயற்பகுதிகளை பயன்படுத்துகின்றன.
  • தாய்ப்பலகை
  • தொடுதிரை
  • திண்மநிலை நினைவகம்
  • முடுக்கமானி
  • புளுடூத் இசைவாக்கி மற்றும் கம்பியற்ற பிணைய இசைவாக்கி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.