பட்சிராஜா ஸ்டுடியோஸ்

பட்சிராஜா ஸ்டுடியோஸ்[1] அல்லது பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் எனும் திரைப்பட படப்பிடிப்பு ஸ்டுடியோ என்பது கோயமுத்தூரில் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடுவால் 1945ல் தொடங்கப்பட்டது. திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு 1910-ல் பிறந்தார், 1976ல் இயற்கை எய்தினார். இவர் இயக்கத்தில், மு. கருணாநிதி வசனத்தில் பட்சிராஜா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம். ஜி. ஆர், பானுமதி நடித்த மலைக்கள்ளன் திரைப்படம் 1954-ஆம் ஆண்டு வெளியானது[2][3]. இந்தப்படம் வெளியான அந்த காலகட்டத்தில் 90 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டு குடியரசுத் தலைவர் விருதும் பெற்றது. தமிழில் குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் திரைப்படமும் இதுதான். பின்பு ம. கோ. ராமச்சந்திரன் நடிப்பில் ஆறு மொழிகளில் இந்த படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்சிராஜா ஸ்டுடியோ-வின் இன்றைய வெளித்தோற்றம்
பட்சிராஜா ஸ்டுடியோஸ்[1]
முன்னைய வகைவரையறுக்கப்பட்டது
நிறுவுகை1945 எஸ்.எம்.ஸ்ரீ ராமுலு நாயுடு
செயலற்றது1972
தலைமையகம்புலியகுளம் சாலை, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ் சினிமா
தெலுங்கு சினிமா
மலையாளம்
கன்னடம்
சிங்களம்
முக்கிய நபர்கள்எஸ்.எம்.ஸ்ரீ ராமுலு நாயுடு,
தொழில்துறைதிரைப்படங்கள்

தற்போது பட்சிராஜா ஸ்டுடியோவானது விக்னேஷுமஹால் எனும் திருமண மண்டபமாகவும்<[4] பிற பகுதிகள் மருத்துவ ஆய்வு கூடம் மற்றும் தொழில் சாலைகளாகவும் மாறிவிட்டன

பட்சிராஜா ஸ்டுடியோ-வின் இன்றைய உள்தோற்றம்

திரைப்படங்களின் பட்டியல்

  1. 1941ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் ஆர்யமாலா,
  2. 1947ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் கன்னிகா,
  3. 1949ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் பவளக்கொடி
  4. 1950ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் காஞ்சனா தமிழ்
  5. 1950ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் காஞ்சனா மலையாளம்
  6. 1950ல் கே.ராம்நாத் இயக்கத்தில் ஏழை படும்பாடு
  7. 1950ல் கே.ராம்நாத் இயக்கத்தில் பீடல பாட்லு தெலுங்கு
  8. 1952ல் அமைய சக்கரவர்த்தி இயக்கத்தில் புரட்சி வீரன்
  9. 1952ல் அமைய சக்கரவர்த்தி இயக்கத்தில் தேசபக்தன் மலையாளம்
  10. 1952ல் ஏ.எஸ்.ஏ.சாமி மற்றும் சீனிவாச ராவ் இயக்கத்தில் பொன்னி
  11. 1952ல் ஏ.எஸ்.ஏ.சாமி மற்றும் சீனிவாச ராவ் இயக்கத்தில் பொன்னி தெலுங்கு
  12. 1954ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் மலைக்கள்ளன் (குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ் திரை படம்),
  13. 1954ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் அஃகி ராமுடு தெலுங்கு [5]
  14. 1954ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் பெட்டட கள்ளகன்னடம் [5]
  15. 1954ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் டஸ்கர வீரன்மலையாளம் [5]
  16. 1954ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் சுரேசேனசிங்களம் [5]
  17. 1955ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் ஆசாத் ஹிந்தி [5]
  18. 1959ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் மரகதம்,
  19. 1960ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் விமலா தெலுங்கு
  20. 1961ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் சபரிமலை ஐய்யப்பன் மலையாளம் படம் ( 3 வது சிறந்த படம் என குடியரசுத் தலைவர் சான்றிதழ்)[5]
  21. 1963ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் கல்யாணியின் கணவன்,

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.