படைத்துறை வானூர்தித் தளம்

படைத்துறை வானூர்தித் தளம் என்பது படைத்துறை வானூர்திகளுக்கான ஒரு நிலையமாகவும் அவற்றுக்கான துணை வசதிகளை வழங்குவதற்கானதுமான ஒரு வானூர்தித் தளம் ஆகும். இவை பொதுமக்களுக்கான வானூர்தி நிலையங்களிலிருந்து வேறுபட்டவை. படைத்துறை வானூர்தித் தளங்கள் பெருமளைவிலான பயணிகள் வந்து போவதற்கான வசதிகளைக் கொண்டிருப்பதில்லை. அத்துடன், சரக்குகளைக் கையாள்வதற்கான சுங்கத்துறை வசதிகளும், குடிவரவு, குடியகல்வுத்துறைக்கான வசதிகளும் இங்கே இருப்பதில்லை. சில இடங்களில் பொதுமக்களுக்கான வானூர்தி நிலையமும், படைத்துறை வானூர்தித் தளமும் ஒன்றாக இருப்பது உண்டு. எனினும், படைத்துறை வானூர்திகளுக்குப் பெருமளவுக்கு வேறுபடுகின்ற துணை வசதிகள் தேவை. அத்தோடு, ஆயுதச் சட்டங்களோடு தொடர்புடைய வான் பயணப் பாதுகாப்புக் கருதிப் பொது மக்கள் வானூர்தி நிலையங்கள் தனியாக இருக்க வேண்டியதும் அவசியம் ஆகிறது.

Büchel airbase of the Luftwaffe, Germany.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.