பசுமைத் தாயகம்

பசுமைத் தாயகம் என்பது இந்தியாவின் சுற்றுச்சூழலியல் மற்றும் சமூகநலச் செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு தன்னார்வ, அரசு சார்பற்ற அமைப்பு ஆகும். இது பாட்டாளி மக்கள் கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவாகச் செயல்படுகிறது.[1] அதன் அதிகார எல்லை தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகாஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது. இவ்வமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு ஆலோசனை நிலையைப் பெற்றுள்ளது.[2][3]

பசுமைத் தாயகம்
உருவாக்கம்1995
வகைஅரசு சாரா அமைப்பு
அமைவிடம்
முக்கிய நபர்கள்
அன்புமணி ராமதாஸ்

வரலாறு

மருத்துவர் ச.இராமதாசால் 1995 நவம்பர் 20 ஆம் தேதி பொது அறக்கட்டளையாக பசுமைத் தாயகம் பதிவுசெய்யப்பட்டது.[4] இந்த இயக்கத்தினைத் தற்போது அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று வழிநடத்துகிறார். ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC), ஐ.நா. 2013 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் பொது விவாதத்துடனான விசேட ஆலோசனைக் கோரிக்கை மாநாட்டில் பசுமைத் தாயகத்தின் சார்பாக அன்புமணி கலந்து கொண்டு, சிறப்பு ஆலோசகர் என்ற அங்கீகாரம் பெற்றுத் தந்தார். பசுமை தயாகம் இன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலில் தமிழ்நாட்டில் உள்ள தனி உறுப்பினராக இருப்பதற்கு அங்கீகாரம் பெற்றிருக்கிறது. சுற்றுச்சூழல் சீர்குலைவுகளை எதிர்ப்பு, மனித உரிமை மீறல்கள் எதிர்ப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை எனப் பல செயல்பாடுகளை இவ்வமைப்பு முன்னெடுக்கிறது.[5][6]

பின்வரும் நிகழ்வுகளில் அமைப்பு பங்கேற்றது:

  • ஜோகன்னஸ்பர்க் உச்சி மாநாட்டில் நிலைபேறு வளர்ச்சி 2002 இல்.
  • 2006 ஆம் ஆண்டில் பெண்களின் நிலை குறித்த ஆணையத்தின் 50 வது அமர்வு.
  • 2006 ஆம் ஆண்டில் புதிய அல்லது மீட்டெடுக்கப்பட்ட ஜனநாயக நாடுகளின் 60 வது சர்வதேச மாநாடு.
  • ஐ.நா மனித உரிமைகள் கழகம் பொது விவாதம் 2013,[7] 2015.[8][9] 2015.

2005 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையுடன் விசேட ஆலோசனை வழங்கப்பட்டது. இதன் விளைவாக, அக்டோபர் 30, 2015 அன்று, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பசுமை தாயகம் அறக்கட்டளையின் மூலம் அன்புமணியால் தெரிவிக்க முடிந்தது.[8][9]

இலக்கு

சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான வளர்ச்சிக்கு பசுமை தாயகம் முதன்மையாக செயல்படுகிறது.

  • சுற்றுச்சூழல் மீளுருவாக்கம்
  • இயற்கை வளங்கள் மேலாண்மை
  • நீர் மேலாண்மை
  • மகத்தான மரம் தோட்டம், மற்றும்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊக்குவிப்பு.

மேற்கோள்கள்

  1. "Pasumai Thayagam launches ‘zero waste’ campaign". thehindu.com. https://www.thehindu.com/news/national/tamil-nadu/pasumai-thayagam-launches-zero-waste-campaign/article7465680.ece. பார்த்த நாள்: 28 December 2018.
  2. "பசுமை தாயகம்".
  3. "Pasumai Thayagam’s booklets distributed to residents" (in en-IN). The Hindu. 2016-02-15. http://www.thehindu.com/news/cities/chennai/pasumai-thayagams-booklets-distributed-to-residents/article8238872.ece.
  4. "Anbumani Unveils Report to Make City More Liveable".
  5. "மரணத்தின் தூதுவர் நடிகர் விஜய்: குழந்தைகளின் மீது திட்டமிட்டு சிகரெட்டை திணிக்கிறார்! பசுமைத் தாயகம் கண்டனம்". நக்கீரன். https://nakkheeran.in/24-by-7-news/politics/actor-vijay-pasumai-thayagam-condemned. பார்த்த நாள்: 28 December 2018.
  6. "ஆதிக்க சாதி வெறியர்களோடும் தன்னார்வ நிறுவனங்களோடும் ஐ.நாவில் இணையும் BTF". inioru.com. https://inioru.com/btf-and-pasumai-thaayagam/. பார்த்த நாள்: 28 December 2018.
  7. ARUL Rathinam (2013-03-14), Pasumai Thaayagam United Nations UNHRC 2013 Tamil Civilians Killed -Speech by Tasha Manoranjan, retrieved 2016-04-07
  8. "Pasumai Thayagam Statements to UNHRC" (2015-10-01).
  9. "OHCHR Report on Sri Lanka (Cont'd) - 38th Meeting, 30th Regular Session Human Rights Council".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.