ப. அருளி

ப.அருளி(17 சூன் 1950) என்பவர் சொல்லாய்வறிஞர் ஆவார். புதுச்சேரியில் பிறந்த இவர் வணிகவியல், சட்டம் பயின்றவர். பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ் வேர்ச்சொல் ஆய்வுகளில் புலமை பெற்றவர். தூய தமிழில் உரையாற்றுவதால் தமிழகத்திலும், அயல்நாடுகளிலும் புகழ்பெற்ற பேச்சாளராக விளங்குபவர். தமிழினத் தொண்டியக்கம் நிறுவி, குமுகத் தொண்டாற்றுபவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தூயதமிழ்- சொல்லாக்க அகரமுதலித் துறையின் தலைவராகப் பணிபுரிந்துள்ளார். இவர் 29 க்கும் மேற்பட்ட நூல்களையும் 250 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இயற்றியுள்ளார். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக ஆய்வரங்கங்களில் ஆய்வுரைகளை வழங்கியுள்ளார்

ப. அருளி

வாழ்வு

1950 ஆம் ஆண்டு பிறந்த அருளியார் பெருஞ்சித்திரனாரின் மகளான தேன்மொழியை 1980-இல் மணந்தார். இவருக்கு அறிவன்-தெள்ளியன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். வழக்கறிஞராக 1980 முதல் 1984 வரை பணியாற்றியுள்ளார்.

கல்விப்பணி

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இவருக்கென்றே தனித்துறையை அரசு உருவாக்கியது. ப. அருளி தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருந்து தகைமையாளராக 1980 முதல் 1984 வரையிலும் (Honorary - Fellow) ஆய்வறிஞராக 1995 முதல் 2007 வரையிலும் (Scholastic Researcher) பேராசிரியராக 2007 முதல் 2010 வரையும் பணிபுரிந்துள்ளார்.

எழுதியுள்ள நூல்கள் (கால நிரலில்)

  1. நிறைந்தேன்! (பாத்தொகை) (1979)
  2. தகுதி (மொழியாய்வுக் கட்டுரை) (1979)
  3. சிங்கள அமர்க்களம் (1981)
  4. இவை தமிழல்ல!... (1983)
  5. இந்திய அரசே இன்னுமா உறக்கம்? (1983)
  6. தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் (முதல் தொகுதி) (1985)
  7. தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் (இரண்டாம் தொகுதி) (1985)
  8. தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் (மூன்றாம் தொகுதி) (1985)
  9. தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் (நான்காம் தொகுதி) (1985)
  10. தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் (ஐந்தாம் தொகுதி) (1985)
  11. இரு வானொலி உரைகள் (1988)
  12. பெற்றோரைப்பற்றி! (1989)
  13. அயற்சொல் அகராதி!...
  14. யா! (ஒரு வேர்ச்சொல் விளக்கம்) (1992)
  15. தென்மொழியின் தொண்டு (இதன் தொடக்கக் காலம் பற்றிய ஒரு மேற்பார்வை)(1992)
  16. அச்சங்களும்-வெறிகளும்--ஓர் அகரமுதலி (Dictionary of Phobias and Manias) (1992)
  17. Dictionary of Technical Terms-அருங்கலைச்சொல் அகரமுதலி[1]
  18. நம் செம்மொழி (2005)
  19. நம் இன்பியல் குறள்மறை கூறும் இல்வாழ்வு விரிவாக்கச் செம்பதிப்பு (2006)
  20. இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி (முதல் தொகுதி) (2007)
  21. இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி (இரண்டாம் தொகுதி) (2007)
  22. இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி (மூன்றாம் தொகுதி) (2007)
  23. இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி (நான்காம் தொகுதி) (2007)
  24. நான் முன்னுரைத்த முன்னுரைகள் - முதல் தொகுதி (2007)
  25. நான் முன்னுரைத்த முன்னுரைகள் - இரண்டாம் தொகுதி (2007)
  26. வேரும் விரிவும் (வேர்ச்சொல்லியல் கட்டுரைகள்) - முதல் தொகுதி (2007)
  27. வேரும் விரிவும் (வேர்ச்சொல்லியல் கட்டுரைகள்) - இரண்டாம் தொகுதி (2007)
  28. மரம்-செடி-கொடி-வேர் - முதல் தொகுதி (2007)
  29. மரம்-செடி-கொடி-வேர் - இரண்டாம் தொகுதி (2007)
  30. Original origines, Voume 1, 2016[2]
  31. Original origines, Voume 2, 2017[3]

சான்றுகள்

  1. Dictionary of Technical Terms-அருங்கலைச்சொல் அகரமுதலி,2002, அருளி.ப, தமிழ்ப் பல்கலைக்கழகம்: தஞ்சாவூர்
  2. Veriyam Publications, Puducherry
  3. Veriyam Publications, Puducherry
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.