நெல்லியடி

நெல்லியடி (Nelliady) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய ஊராகும். கரவெட்டி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள நான்கு பிரதான வீதிகள் (பருத்தித்துறை, கொடிகாமம், திக்கம், யாழ்ப்பாணம் செல்லும் வீதிகள்) சந்திக்கும் சந்தியில் இவ்வூர் அமைந்துள்ளதால் வணிக ரீதியில் இது முக்கியத்துவம் பெறுகிறது. வடமராட்சிப் பகுதியின் புராதன, மத்திய, துறைமுக மற்றும் நிர்வாக நகரமாக பருத்தித்துறையே விளங்கிய போதிலும் போர்ச்சூழல் மற்றும் ஆழிப்பேரலை அழிவுகள் காரணமாக வங்கிகள் உட்பட பல முக்கிய வணிகம் சார் நிறுவனங்கள் நெல்லியடியிலே அமைய வேண்டி ஏற்பட்டது. நெல்லியடியில் உள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முகாம் இட்டிருந்த இலங்கை அரச இராணுவத்தின் மீது ஜூலை 5, 1987 இல் கப்டன் மில்லர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் புலிகளின் கரும்புலிகள் அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான்.[1]

நெல்லியடி

நெல்லியடி
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.799353°N 80.198356°E / 9.799353; 80.198356
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

இங்குள்ள பாடசாலைகள்

ஆலயங்கள்

  • நெல்லியடி முருகையன் கோயில்
  • நெல்லியடி காளி கோயில்[3]
  • நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி ஆலயம்[4]

மேற்கோள்கள்

  1. Col R Hariharan. "SRI LANKA: LTTE AND THE CULT OF SUICIDE WARRIORS". பார்த்த நாள் 8 செப்டம்பர் 2018.
  2. "நெல்லியடி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை". பார்த்த நாள் 8 செப்டம்பர் 2018.
  3. த.சிவபாலு. "இயல்விருது 2006 ஒரு பார்வை!". பார்த்த நாள் 8 செப்டம்பர் 2018.
  4. செல்லத்துரை சுதர்சன். "சாதி : தொகை நிலையும் தொகா நிலையும்". பார்த்த நாள் 8 செப்டம்பர் 2018.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.