நெடுங்குழு (தனிம அட்டவணை)

நெடுங்குழுஅல்லது கூட்டம் அல்லது தொகுதி என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும். தனிம அட்டவணையில் மொத்தம் 18 நெடுங்குழுக்கள் உள்ளன. தனிமங்களின் அட்டவணையானது அணுக்களின் அமைப்பைப் பொருத்து ஒரு சீர்மையுடன் அடுக்கப்பட்டுள்ளது. இதனால், நெடுங்குழுக்கள் வேதியியல் தொடர்புடைய வரிசைகளாய் இருக்கின்றன. முன்பு பயன்பாட்டில் இருந்து வந்த அட்டவணையில் ரோம எண்கள் பயன்படுத்தப்பட்டன. இதே போன்று அமெரிக்க அட்டவணையிலும் ரோம எண்களே இருந்தன. தனிம அட்டவணையில் உள்ள தனிமங்கள் அவற்றின் தொகுதிகளில் ஒரே எலக்ட்ரான் அமைப்புகளைப் பெற்றுள்ளன. மேலும் அவை அவற்றின் வெளிக்கூட்டு சுழல் தடத்தில் (orbital) சம எண்ணிக்கையில் எலக்ட்ரான்களையும், ஒரே பண்புகளையும் பெற்றுள்ளன.

18 நெடுங்குழுக்களும் அவைகளின் பழைய மற்றும் புதிய எண்ககளின் வகைபடுத்திய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொகுதி

புதிய ஐயுபிஏசி எண்பழைய ஐயுபிஏசி எண்அமெரிக்க எண்பெயர்
நெடுங்குழு 1IAIAகார மாழைகள் அல்லது லித்தியம் தொகுதி
நெடுங்குழு 2IIAIIAகாரக்கனிம மாழைகள் அல்லது பெரிலியம் தொகுதி
நெடுங்குழு 3IIIAIIIBஇசுக்காண்டியம் தொகுதி
நெடுங்குழு 4IVAIVBடைட்டேனியம் தொகுதி
நெடுங்குழு 5VAVBவனேடியம் தொகுதி
நெடுங்குழு 6VIAVIBகுரோமியம் தொகுதி
நெடுங்குழு 7VIIAVIIBமாங்கனீசு தொகுதி
நெடுங்குழு 8VIIIVIIIBஇரும்பு தொகுதி
நெடுங்குழு 9VIIIVIIIBகோபால்ட் தொகுதி
நெடுங்குழு 10VIIIVIIIBநிக்கல் தொகுதி
நெடுங்குழு 11IBIBசெப்பு தொகுதி
நெடுங்குழு 12IIBIIBதுத்தநாகம் தொகுதி
நெடுங்குழு 13IIIBIIIAபோரான் தொகுதி
நெடுங்குழு 14IVBIVAகரிமம் தொகுதி
நெடுங்குழு 15VBVAநைத்ரசன் தொகுதி
நெடுங்குழு 16VIBVIAஉயிர்வளிக்குழு அல்லது ஆக்சிசன் தொகுதி
நெடுங்குழு 17VIIBVIIAஆலசன் அல்லது புளோரின் தொகுதி
நெடுங்குழு 18நெடுங்குழு 0VIIIAஅருமன் வாயு

வேதியியல் தொடர்

ஆவர்த்தன அட்டவணையில் வேதியியல் தொடர் வேதியியல் தனிமங்களின் என்பது ஒரு வரிசையைக் குறிக்கும். இவ்வரிசையிலுள்ள தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் தொடரின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செல்லும்போது படிமுறையான வேறுபாடுகளைக் காட்டுகின்றன. வேதியியல் தொடர், ஆவர்த்தன அட்டவணைக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

பல வேதியியல் தொடர்கள் ஆவர்த்தன அட்டவணைக் கூட்டங்களை அச்சொட்டாக ஒத்துள்ளன. இது ஒரு தற்செயலான ஒற்றுமையல்ல. தனிமங்களை ஒரே கூட்டத்தில் சேர்ப்பதற்கு ஏதுவான இயல்பியல் பண்புகள், ஆவர்த்தன அட்டவணையில் அவற்றை ஒரே கூட்டத்தில் சேர்ப்பதற்கான அதே அணு ஒழுக்குப் புறவமைப்புக்களிலேயே தங்கியுள்ளது.

ஆவர்த்தன அட்டவணையின் வேதியியல் தொடர்கள்:

கார உலோகங்கள்(ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 1)
காரமண் உலோகங்கள்(ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 2)
லந்தனைட்டுகள்
அக்டினைட்டுகள்
இடைநிலை உலோகங்கள்
குறை உலோகங்கள்
உலோகப்போலிகள்
உலோகமல்லாதவை
அலசன்கள்(ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 17)
சடத்துவ வாயுக்கள்(ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 18)

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.