நீல் நிதின் முகேஷ்
நீல் நிதின் முகேஷ் (ஹிந்தி: नील नितिन मुकेश, உச்சரிப்பு [ˈniːl ˈnɪtɪn mʊˈkeːʃ]; பிறப்பு 15 ஜனவரி, 1982)நீல் மாதுர் என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு பாலிவுட் நடிகர். இவர் பின்னணி பாடகர் நிதின் முகேஷ் அவர்களின் மகனும், மறைந்த பிரபல பின்னணி பாடகர் முகேஷ் அவர்களின் பேரனும் ஆவார். இவருடைய பாட்டனரான முகேஷ் சந்த் மாதுர் இந்திய சினிமாவின் சிறந்த பின்னணி பாடகராவார். [1]
Neil Nitin Mukesh | |
---|---|
![]() | |
இயற் பெயர் | Neil Mathur |
பிறப்பு | சனவரி 15, 1982 Mumbai, India |
வேறு பெயர் | Neil Nitin Mukesh |
தொழில் | Actor, Playback Singer |
நடிப்புக் காலம் | 1988 - 1989 2007 - present |
வாழ்க்கை வரலாறு
தனது தந்தையின் வற்புறுத்தலுக்கு இணங்க, நீல் HR கல்லூரியில் தகவல் தொடர்புத் துறை இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அவர் தன்னுடைய 12 ஆம் வகுப்பிலிருந்தே தனது வாழ்க்கைப் பாதையில் மிகவும் கவனம் செலுத்தி வந்தார்.மிகவும் அழகான தோற்றம் கொண்டவர் என்பதால் அவருக்கு இந்த பெயரை லதா மங்கேஷ்கர் சூட்டினார்.அவருடைய விடுமுறை காலங்களில், கிஷோர் நமித் கப்பூருடனும் அனுபம் கெரின் பயிற்சி மையத்திலும் 4 மாத காலம் பயிற்சி பெற்றார். அவர் கல்லூரியில் படிக்கும்போதே ஆதித்யா சோப்ராவுக்கு அவருடைய படமான முஜ்ஸே தோஸ்தி கரோகே என்ற திரைப்படத்தில் உதவினார். முக்கிய நடிகராக நடிப்பதற்கான வாய்ப்புகள் நீலுக்கு ஆரம்ப காலங்களிலேயே வரத்தொடங்கின. ஆனாலும் ஒரு காதல் கதையில் தான் அறிமுகமாவதை விரும்பாத நீல் காத்திருக்க முடிவு செய்தார். பின்னர் ஸ்ரீராம் ராகவன் தன்னுடைய ஜானி கத்தார் படத்தில் நடிக்குமாறு நீலை அழைத்தார். ஒரு குழுவில் ஒரு நபராக தன்னை நடிக்குமாறு கோரிய அவருடைய கதை அமைப்பில் மிகவும் ஈர்க்கப்பட்டார்.
அவர் எப்போதுமே ஒரு நடிகராகவே விரும்பினார். அது அவருடைய குழந்தைப்பருவ கனவாகவே இருந்து வந்தது. யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் திரைப்படமான விஜய் மற்றும் விமல் குமாரின் ஜய்ஸி கர்னி வைஸி பர்னி ஆகிய இரு படங்களிலும் 7 வயதாக இருந்த போதே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஜய்ஸி கர்னி வைஸி பர்னி திரைப்படத்தில் நடிகர் கோவிந்தாவின் குழந்தை பருவத் தோற்றத்தில் நடித்தார்.
கேரியர்
குழந்தை நட்சத்திரமாக விஜய் (1988) மற்றும் ஜய்ஸி கர்னி வைஸி பர்னி (1989) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஜானி கத்தார் என்ற க்ரைம் திரில்லர் திரைப்படத்தில் நீல் அறிமுகமானார். படத்தில் முக்கியமான முரண்பட்ட கதாபாத்திரமான விக்ரமாக இவர் நடித்ததற்கு அதிகமான பாராட்டுகளைப் பெற்றார்.[2][3] அந்த திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் அதிக வசூலைத் தராவிட்டாலும், இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்க பயமில்லாதவராக இவர் இருப்பது ஒரு நல்ல விஷயம் என்று ஒரு விமர்சகர் இவரைப் பற்றி குறிப்பிடுகிறார்.[4]. சுதீர் மிஷ்ராவின் தேரா க்யா ஹோகா ஜானி மற்றும் நியூயார்க் , ஆ தேக்கா ஜரா , மற்றும் மதுர் பண்டேகரின் ஜெயில் ஆகிய திரைப்படங்கள் இவருடைய நடிப்பில் வரவிருக்கின்றன[5].
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
பிலிம்பேர் விருதுகள்
பரிந்துரைக்கப்பட்டது
- 2008:
ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்
பரிந்துரைக்கப்பட்டது
ஸ்டார்டஸ்ட் விருதுகள்
பரிந்துரைக்கப்பட்டது
- 2008: ஸ்டார்டஸ்ட் நாளைய சூப்பர் ஸ்டார் - ஆண்; ஜானி கத்தார்
அப்சரா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க விருதுகள்
- 2008 - எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பு
திரைப்பட வரலாறு
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1988 | விஜய் | இளவயது விக்ரம் பரத்வாஜ் | குழந்தை நட்சத்திரம் |
1989 | ஜய்சி கர்னி வைஸி பர்னி | இளவயது ரவி வர்மா | குழந்தை நட்சத்திரம் |
2007 | ஜானி கத்தார் | விக்ரம் | பரிந்துரை - பிலிம்பேர் சிறந்த ஆண் அறிமுக நடிகர் |
2009 | ஆ தேக்கான் ஜரா | ரே ஆச்சார்யா | |
நியூயார்க் | ஓமர் | ||
ஜெயில் | பராக் தீக்சித் | படப்பிடிப்பில் | |
2009 | தேரா க்யா ஹோகா ஜானி | பர்வேஸ் | டிசம்பர் 17, 2008 இல் துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது |
2010 | தேங்க் யூ | ||
தி இட்டாலியன் ஜாப் | |||
சார்லஸ் | |||
மேஜிக் மேன் | |||
2014 | கத்தி | கார்ப்பரேட் நிறுவன முதலாளி | |
இதையும் பாருங்கள்
- நிதின் முகேஷ்
- முகேஷ்