நிக்கோலோ மாக்கியவெல்லி
நிக்கோலோ மாக்கியவெல்லி எனச் சுருக்கமாக அறியப்படும் நிக்கோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவெல்லி (Niccolò di Bernardo dei Machiavelli - மே 3, 1469 – சூன் 21, 1527) ஒரு இத்தாலிய இராசதந்திரியும், அரசியல் மெய்யியலாளரும், இசைக் கலைஞரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். மக்கியவெல்லி இத்தாலிய மறுமலர்ச்சியின் முக்கியமான ஒருவரும், புளோரன்சு குடியரசின் ஊழியருமாக இருந்தார். 1498 ஆம் ஆண்டில் சவனரோலா வெளியேற்றப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளானபோது, பேரவை கூடி மாக்கியவெல்லியை புளோரன்சுக் குடியரசின் இரண்டாம் காப்பகத்தின் (Chancery) செயலராகத் தெரிவு செய்தது.

நிக்கோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவெல்லி | |
---|---|
![]() புளோரன்சு பொது ஊழியருக்குரிய உடையுடன் மாக்கியவெல்லி. | |
முழுப் பெயர் | நிக்கோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவெல்லி |
பிறப்பு | மே 3, 1469 புளோரன்சு, இத்தாலி |
இறப்பு | சூன் 21, 1527 58) புளோரன்சு, இத்தாலி | (அகவை
காலம் | மறுமலர்ச்சிக்கால மெய்யியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
சிந்தனை மரபுகள் | மறுமலர்ச்சி மெய்யியல், உண்மையியம், மரபுக் குடியரசுவாதம் |
முக்கிய ஆர்வங்கள் | அரசியல் தத்துவம், படைத்துறைக் கோட்பாடு, வரலாறு |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
| |
கையெழுத்து | ![]() |
இளவரசன் (The Prince) என்னும் ஒரு சிறிய ஆக்கத்துக்காகவே இவர் கூடிய பெயர் பெற்றார். இது சில வேளைகளில் உண்மையிய அரசியல் கோட்பாடு எனக் குறிப்பிடப்படுவது உண்டு. இந்த ஆக்கமும், விரிவான இன்னொரு ஆக்கமான லெவி பற்றிய சொற்பொழிவுகள் (Discourses on Livy) மற்றும் புளோரன்சின் வரலாறு (History of Florence) என்னும் ஆக்கமும் அவர் இறந்த பின்னர் 1530களிலேயே வெளியிடப்பட்டன.