நிக்கிட்டா குருசேவ்

நிக்கிட்டா செர்கேவிச் குருசேவ் (Nikita Sergeyevich Khrushchev, உருசிய மொழி: Ники́та Серге́евич Хрущёв ; ஏப்ரல் 17, 1894 - செப்டம்பர் 11, 1971) சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஜோசப் ஸ்டாலினின் மறைவை அடுத்து 1953 முதல் 1964 வரை பதவி வகித்தவர். 1958 முதல் 1964 வரை சோவியத் பிரதமராகவும் பதவியில் இருந்தார். கட்சித் தலைவர்கள் இவரை 1964 இல் பதவியில் இருந்து அகற்றி லியோனிட் பிரெஷ்னேவை கட்சித் தலைவராக்கினர். இவரது வாழ்க்கையின் கடைசி ஏழாண்டுகளும் சோவியத் உளவு நிறுவனமான கேஜிபியின் நேரடிக் கண்காணிப்பில் வாழ்ந்து வந்தார்.

நிக்கிட்டா செர்கேவிச் குருசேவ்
Nikita Sergyeyevich Khrushchev
Никита Сергеевич Хрущёв
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர்
பதவியில்
செப்டம்பர் 7, 1953  அக்டோபர் 14, 1964
முன்னவர் ஜோசப் ஸ்டாலின்
பின்வந்தவர் லியோனிட் பிரெஷ்னேவ்
சோவியத் ஒன்றியப் பிரதமர்
பதவியில்
மார்ச் 27, 1958  அக்டோபர் 14, 1964
முன்னவர் நிக்கலாய் புல்கானின்
பின்வந்தவர் அலெக்சி கொசிஜின்
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 17, 1894(1894-04-17)
கூர்ஸ்க் ஓப்லஸ்து, ரஷ்யா
இறப்பு செப்டம்பர் 11, 1971(1971-09-11) (அகவை 77)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
தேசியம் ரஷ்யன்
அரசியல் கட்சி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) யெஃப்ரோசீனியா குருசேவா
மரூசியா குருசேவா
நீனா குருஷேவா


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.