நிக்கலாய் நோசவ்

நிக்கலாய் நோசவ் (Nikolay Nosov, நவம்பர் 23, 1908-ஜூலை 26, 1976) ஒரு சோவியத் குழந்தைகள் எழுத்தாளர். நகைச்சுவை உணர்வு மிக்க பல சிறுகதைகள், ஒரு புதினம் மற்றும் தேவதைக் கதை புதினங்களை எழுதியுள்ளார்.

உக்ரைனின் கீவ் நகரில் பிறந்த நோசோவ் 1927-29 காலகட்டத்தில் கீவ் கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் 1932 இல் மாஸ்கோ ஒளிப்படக்கலைக் கழகத்திலிருந்து பட்டம் பெற்றார். 1938 இல் அவரது முதல் சிறுகதை வெளியானது. 1932-51 காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்தின் செஞ்சேனையில் அசைப்படங்கள் மற்றும் கல்விப்படங்களைத் தயாரித்து வெளியிடுபவராகப் பணியாற்றினார். இவரது நகைச்சுவை உணர்வு மிக்க சிறுவர் கதைகள் மிகவும் புகழ்பெற்றவை. அவற்றில் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிட்டப்பட்டுள்ளன. மீஷா சமைத்த பொங்கல், துனோவும் அவனது சகாக்களும், கோல்யா சினித்சினது நாட்குறிப்பு, வீட்டிலும் பள்ளியிலும், உல்லாச குடும்பம் ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.