நாயன்மார்கட்டு

நாயன்மார்கட்டு (ஆங்கிலம்:Nayanmarkaddu) இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் நல்லூரிற்குக் கிழக்கே அமைந்துள்ள ஒரு ஊர். 63 நாயன்மார்களுக்கும் மடம் அமைத்துக் குருபூசை செய்து வந்ததன் காரணமாக நாயன்மார்கட்டு என்று அழைக்கப்படுகின்றது.

பண்பாட்டுத் தொன்மை

நாயன்மார்கட்டு பிராந்தியமானது வரலாற்றுத் தொன்மைமிக்க சங்கிலியன் தோப்பு, இராஜகுமாரன் வளவு, யமுனாரி, ஆகியன அமைந்துள்ள நிலப்பரப்புக்கு நேர் கிழக்கே அமைந்திருக்கிறது. திட்டவட்டமாக நாயன்மார்கட்டு எல்லைகளை வரையறுப்பதில் சிக்கல்கள் இருந்தாலும், இப்பிரதேசத்திற்கு வடபால் கோட்டை வாசல் கிராமமும், தென்திசையில் அரியாலையூரும், கிழக்குத் திசையில் காட்டுவாசல் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பும், உப்பு விளையும் வயற்பரப்பும் எல்லைகளாக அமைந்திருக்கின்றன.

நாயன்மார்கட்டு தொடர்பாக யாழ்ப்பாணச் சரித்திரம் எனும் நூலில் நூலாசிரியர் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பின்வருமாறு பதிவு செய்கின்றார். “குணபூஷண சிங்கையாரியச் சக்கரவர்த்தியின் உத்தரவிற்கமைய அவனது மந்திரி அறுபத்துமூன்று நாயன்மார்க்கும் ஒருமடாலயம் அமைப்பித்தான். அறுபத்து மூவர் மடமிருந்தவிடம் நாயன்மார்கட்டென வழங்குகின்றது.”[1]

ஆலயங்கள்

சனசமூக நிலையங்கள்

  • நாயன்மார்கட்டு சனசமூக நிலையம்
  • பாரதி மன்றம் சனசமூக நிலையம்

உசாத்துணை நூல்கள்

  1. முத்துத்தம்பிப்பிள்ளை ஆ. யாழ்ப்பாணச் சரித்திரம், இரண்டாம் பதிப்பு, 1915, பக். 27, 28
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.