நாயன்மார்கட்டு சிறீ இராசராசேசுவரி அம்பாள் ஆலயம்


நாயன்மார்கட்டு சிறீ இராசராசேசுவரி அம்பாள் ஆலயம் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுக் கிராமத்திலுள்ள தொன்மையான முப்பெருஞ் சைவாலயங்களுள் ஒன்றாகும்.

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம்
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம்
தேசப்படத்தில் பேச்சி அம்மன் கோவில்
ஆள்கூறுகள்:9°40′4.84″N 80°2′51.64″E
பெயர்
பெயர்:பேச்சி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வடமாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
அமைவு:அரியாலை, ஆனந்தன் வடலி வீதியில்
கோயில் தகவல்கள்
மூலவர்:அம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

முன்னோடி ஆலயம்

நல்லைநகர் ஆறுமுக நாவலரின் மூதாதையர்களுக்குரிய காணியில், அச்சுவேலியிலிருந்து வந்த முருகர் என்பவர் இங்கு வாழ்ந்து, ஒரு வேப்பமரத்தின் கீழ் மேடை அமைத்து, பேய்ச்சி அம்பாளின் மரக்கட்டை உருவமைத்து வழிபட்டதாகவும் பின் முன்னோடி ஆலயம் அமைந்ததாகவும் கூறப்படுகின்றது. வேப்பமரத்தின் அருகே முன்னரே அன்னை வழிபாடு இருந்ததா அல்லது அவரே முன்னோடியாக அமைத்தாரா என்பதை அறிய முடியவில்லை. முருகர் பரம்பரையினர் ஆலயத் திருப்பணிகளைத் தொடர்ந்ததாகவும் பின் அவர்களின் நண்பர்களும் ஊரவர்களும் ஆலயப் பணியை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

புதிய ஆலயப்பணி

கி.பி. 1521 இல் முருகரால் தொடங்கப்பட்ட இக்கோயில் 1571இல் அழிந்து, அன்னையின் மரச்சிலை நிலத்துள் மறைந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் அன்னை வழிபாடு தொடர்ந்து 1918இல் பெருமழை பெய்து கோயில் மீண்டும் அழிவுற்றதாகவும் கோயிலை மீள அமைக்க முயன்றபோது நிலத்தின் கீழிருந்த அன்னை சிலை மீட்கப்பட்டுக் கோயிலில் பயன்படுத்தப்பட்டதாகவும் அது இன்றுவரை ஆலயத்துள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.