நா. மகேசன்

நா. மகேசன் (பி: 1933, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்) அவர்கள் மேடை நாடக விற்பன்னர். பல பயனுள்ள நூல்களைப் படைத்தவர். வானொலி மாமா என அழைக்கப்பெற்றவர்.

நா. மகேசன்
பிறப்பு1933
பண்டத்தரிப்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுவானொலி மாமா ஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்நாகலிங்கம் - சின்னம்மா

வாழ்க்கைக் குறிப்பு

நாகலிங்கம் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஐந்தாவது மகவாகப் பிறந்த மகேசன் இளவாலை சாந்த ஹென்றி கல்லூரியில் கல்வி பயின்றார்.

கலைப்பணி

இலங்கை அரசாங்க கணக்காளர் சேவையில் கணக்காளராகப் பணிபுரிந்த போதிலும், இலங்கை வானொலியில் 'சிறுவர் மலர்' என்ற 45-நிமிட நேர நிகழ்ச்சி மூலம் 1965 முதல் தனது கலைப்பணியை ஆரம்பித்து, 1981 வரை விடாது நடத்தி வந்தார். இதனால் இவர் 'வானொலி மாமா' என சிறுவர்களாலும் பெரியவர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டார். சிறுவர் மலர் நிகழ்ச்சியில், சிறுவர்களுக்கான நாடகங்களை எழுதியும், நெறிப்படுத்தியும் வந்தார்.

பிள்ளைக் கவியரசு அழ. வள்ளியப்பா போன்ற அறிஞர் பெருமக்களால் பாராட்டப்பட்ட இவர் தற்போது சிட்னியில் வசித்து வருகிறார்.

சிட்னியில் தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஆற்றி வரும் சேவையைப் பாராட்டி நியூ சவுத் வேல்ஸ் அரசு 2006 இல் அவருக்கு “THE ACHIEVER” என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

வெளிவந்த நூல்கள்

  • குறளும் கதையும் (சிறுகதைகள், 1973)
  • பாட்டும் கதையும் (கதைப்பாடல்கள், 1974)
  • முனியன் முரளிகானன் (குறுநாவல், 1977)
  • ஆத்திசூடி அறநெறிக் கதைகள் (1978)
  • உடைந்த உள்ளம் (நாவல் - 2 பாகங்கள், 1979)
  • அவுஸ்திரேலியாவில் ஆத்திசூடி (சிறுவர் கதைத்தொகுதி, 1991)
  • திருமுறையும் திருக்கதையும் (தேவார விளக்கக் கதைகள், 1994)
  • பாலர் நாடகங்கள் பத்து (1995)
  • நாடகக் கவியரங்கு நாலு (சிறுவர் கவியரங்குத் தொகுதி, 1995)
  • ஆறுமுகமான பொருள் (திருப்புகழ் விளக்கம், 1995)
  • திருவிழா (சிறுவர் சைவ சமய நாவல், 1996)
  • A Glimpse of Saiva Religion (சைவ சமய விளக்கம், 1996)
  • சிறுவர் பாடல்கள் (அவுஸ்திரேலியப் பின்னணியில் சிறுவர் பாடல்கள், 1997)
  • சைவசமய குரவர் போற்றி மாலை (போற்றித் துதி, 1998)
  • சைவசமய இறுதிச் சடங்கு - நடைமுறையும் விளக்கமும் (1998)
  • சிட்னி முருகன் பிள்ளைத் தமிழ் (பிரபந்த நூல், 1999)
  • ஔவை வந்தால்.. (மாணவர் மேடை நாடகங்கள், 2001)

விருதுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.