நஸ்ரியா நசீம்

நஸ்ரியா நசீம் (ஆங்கிலம்:Nazriya Nazim) என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.[1]

நசிரியா நசீம்
பிறப்புதிசம்பர் 20, 1994 (1994-12-20)
திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
இருப்பிடம்திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
பணிதிரைப்பட நடிகை, பின்னணிப் பாடகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், விளம்பர அழகி
செயல்பட்ட 
ஆண்டுகள்
2005 – தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
பகத் பாசில்

வாழ்க்கை குறிப்பு

நஷ்ரியா நசீம் 1994, திசம்பர் 20 ஆம் நாளில் நசீமுதீன், பேகம்பீனா ஆகியோருக்கு திருவனந்தபுரத்தில் பிறந்தார்.[2] இவர் இளமைப்பருவத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கிறித்துவப் பள்ளி ஒன்றில் படிப்பைத் துவங்கினார். பின்னர் 2013 ம் ஆண்டு வணிகவியல் இளங்கலைப் பிரிவில் தனது கல்லூரிக் கல்வியைத் தொடங்கியவர் திரைப்படங்களின் படப்பிடிப்புகளால் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டார். இவரின் குடும்பம் ஐக்கிய அரபு அமிரகத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.[3][4][5]

திருமணம்

மலையாள முன்னணி இயக்குநரான பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பஹத் பாசிலுடன் நஸ்ரியா திருமணம் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.[6][7]

படங்களின் பட்டியல்

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2006பளுங்குகீதாமலையாளம்குழந்தை கதாப்பாத்திரம்
2006ஒருநாள் ஒரு கனவுதமிழ்
2010பிராமணிசிந்துமலையாளம்குழந்தை கதாபாத்திரம்
ஒரு நாள் வரும்தன்யாமலையாளம்குழந்தை கதாபாத்திரம்
2013மாட் டாட்மரியாமலையாளம்
நேரம்ஜீனாமலையாளம்
வேணிதமிழ்
ராஜா ராணிகீர்த்தனாதமிழ்
நய்யாண்டிவனரோஜாதமிழ்
திருமணம் என்னும் நிக்காஆயிசாதமிழ்
சலாலா மொபைல்சுசஷானாமலையாளம்படப்பிடிப்பில்
2014நீ நல்லா வருவடாதமிழ்படப்பிடிப்பில்[8]
வாயை மூடி பேசவும்தமிழ்
பெங்களூர் டேஸ்திவ்யா பிரகாஷ்மலையாளம்
ஓம் சாந்தி ஓசனாபூஜா மாதேவ்மலையாளம்படப்பிடிப்பில்
ஹாய் ஐ அம் டோனிமலையாளம்படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.