இரா. நல்லகண்ணு

இரா. நல்லகண்ணு (R. Nallakannu, பிறப்பு: 26 திசம்பர் 1925) சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டுகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். தப்போது மத்திய கமிட்டி உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவராக இருக்கிறார்.

இரா. நல்லகண்ணு
மத்திய கமிட்டி உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 26, 1925 (1925-12-26)
ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி அரசியல்வாதி

வாழ்க்கை வரலாறு‍

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லகண்ணு 18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய முதல் நடவடிக்கை இதுவாகும். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை நாங்கள் வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்தது அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது.[1]

சாதி எதிர்ப்புப் போராளி

இவருடைய 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்து கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.

சாதீய அக்கிரமங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காக தன் வாழ்க்கையைச் சிறைக்கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர்.

விருதுகள்

தமிழக அரசின் அம்பேத்கர் விருதைப் பெற்றுள்ளார்.[2]

ஆதாரம்

  1. http://www.dinamalar.com/Supplementary/anathavikadan_detail.asp?news_id=225&dt=11-19-09
  2. "இவர்.... நல்லக்கண்ணு". தமிழ் உலகம் (அக்டோபர் 3, 2013). மூல முகவரியிலிருந்து அக்டோபர் 3, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் டிசம்பர் 25, 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.