நயா ராய்ப்பூர்
நவ ராய்ப்பூர் அடல் நகர் (Nava Raipur Atal Nagar), பொருள்: புதிய ராய்பூர் அடல் நகர் என்பது இந்திய மாநிலமான சத்தீஸ்கரின் வருங்காலத் தலைநகராகும். காந்திநகர், சண்டிகர், புவனேசுவர் ஆகிய திட்டமிடப்பட்ட தலைநகரங்கள் வரிசையில் இந்தியாவின் நான்காம் திட்டமிடப்பட்ட தலைநகர் நயா ராய்ப்பூர் அடல் நகர் ஆகும்.[1][2]முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் நினைவாக இப்புதிய பொலிவுறு நகரத்திற்கு முதன்முதலில் அடல் நகர் பெயரிடப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இப்பெயரை சூலை 2019-இல் நவ ராய்ப்பூர் அடல் நகர் என மாற்றியது. [3]
நவ ராய்ப்பூர் அடல் நகர் | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | சத்தீசுகர் |
மாவட்டம் | ராய்ப்பூர் |
அரசு | |
• Body | புதிய ராய்ப்பூர் மேம்பாட்டு வாரியம் |
மொழிகள் | |
• Official | இந்தி, சத்திசுகரி மொழி |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
தொலைபேசிக் குறியீடு | +91-0771 |
வாகனப் பதிவு | CG 04 |
அண்மைப் பெருநகர் | ராய்ப்பூர் |
மக்களவை (இந்தியா) தொகுதி | ராய்ப்பூர் |
குடிமை அமைப்பு | நவ ராய்ப்பூர் அடல் நகர் மேம்பாட்டு வாரியம் |
இணையதளம் | www.nayaraipur.in/nraip/ |
அமைவிடம்
ராய்ப்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை-6க்கும் 43க்கும் இடையில் அமைந்துள்ள நவ ராய்ப்பூர் அடல் நகர், பழைய ராய்ப்பூரில் இருந்து தென்கிழக்கே 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுவாமி விவேகானந்தா விமானநிலையம் பழைய மற்றும் புதிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.