நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்

நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் (ஆங்: Federally Administered Tribal Areas ((FATA), உருது: ) பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள 27,220 சகீமீ பரப்பளவில் அமைந்த மலைப்பகுதிகள் ஆகும். இங்கு இசுலாமிய மலைவாழ் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். பாகிஸ்தானில் மிகவும் நாட்டுப்புறமான பகுதியாகும்; இப்பகுதியின் 3,341,070 மக்களில் 3.1% மட்டும் நகரங்களில் வசிக்கின்றனர்.

நடுவண் அரசின் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்
وفاقی منتظم شدہ قبائیلی علاقہ
தன்னாட்சிப் பிரதேசம் of பாகிஸ்தான்
1947–2018 [[கைபர் பகதுன்வா|]]

கொடி

Location of FATA
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடுவண் அரசின் நிர்வாகத்தில் உள்ள பழங்குடிப் பகுதிகள்
வரலாறு
  நிறுவப்பட்டது 14 ஆகஸ்டு 1947
  கைபர் பக்துன்வா 31 மே 2018
Population
  2017 5 
தற்காலத்தில் அங்கம் கைபர் பக்துன்வா, பாகிஸ்தான்

நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் தெற்கு வசீரிஸ்தான், வடக்கு வசீரிஸ்தான், கைபர் மாவட்டம், குர்ரம் பகுதி, பஜவுர் பகுதி, மொஹ்மந்த் பகுதி, ஓரக்சாய் பகுதி என 7 முகமைகள் உள்ளன. கூடுதலாக ஆறு எல்லைபுறப் பகுதிகள் உள்ளன. இந்த அரசியல் பிரிவின் நிர்வாக மையம் பெஷாவர் நகரில் அமைந்துள்ளது.

இப்பழங்குடிப் பகுதிகளில் செயல்படும் தலிபான் மற்றும் பாகிஸ்தான் மத அடிப்படைவாத தீவிரவாதிகளால் பெண் குழந்தைகளுக்கு கல்வியும் மற்றும் மகளிர்க்கு ஆங்கில மருத்துவம் மறுக்கப்படுகிறது. [1]

இப்பகுதி தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் இருந்ததால், 2018-இல் பாகிஸ்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இப்பகுதியை கைபர் பக்துன்வா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. [2] [3]

இதனையும் காண்க

குறிப்புக்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.