தோன்சே ஆனந்த் பை

தோன்சே ஆனந்த் பை (Tonse Ananth Pai|T. A. Pai) (சுருக்கமாக: டி. ஏ. பை), (17 சனவரி 1922 – 29 மே 1981) சிண்டிகேட் வங்கியின் வளர்ச்சிக்கு துணை நின்றவரும், அதன் பொது மேலாளராகவும், தலைவராகவும் இருந்தவர். மணிபால் டி. ஏ. பை மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் நிறுவுநரும் ஆவார்.[1][2]

பத்ம பூசண்
தோன்சே ஆனந்த பை
தாய்மொழியில் பெயர்ತೊನ್ಸೆ ಅನಂತ ಪೈ
பிறப்பு17 சனவரி 1922
இறப்பு29 மே 1981
தேசியம்இந்தியர்
பணிவங்கியாளர்
பெற்றோர்தோன்சே உபேந்திர பை
உறவினர்கள்தோன்சே ரமேஷ் உபேந்திரா பை

வங்கிப் பணியில்

இவரது உறவினர் நிறுவிய சிண்டிகேட் வங்கியில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த டி. ஏ. பையை இந்திய அரசு 1970-இல் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைவராக நியமித்தது. பெங்களூரு இந்திய மேலாண்மை கழகத்தின் முதலாவது தலைவராக டி. ஏ. பை நியமிக்கப்பட்டார்.[3]

அரசியல்

1972-இல் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசின் இரயில்வே, கனரகத் தொழில்கள், உருக்கு மற்றும் சுரங்கத் துறைகளின் அமைச்சராக செயல்பட்டவர். 1977-இல் உடுப்பி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

விருதுகள்

1972-இல் டி. ஏ. பைக்கு இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கி பாராட்டியது.[4] டி. ஏ. பைக்கு 1973-இல் கர்நாடகப் பல்கலைக்கழகமும், 1975-இல் ஆந்திரா பல்கலைக்கழகமும் கௌரவ டாக்டர் விருது வழங்கி பாராட்டியது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.