தோகோ (நாய்)
தோகோ அல்லது டோகோ (அக்டோபர் 1913 – திசம்பர் 5, 1929) என்னும் நாய் லியான்கார்டு செப்பாலா என்பவரின் பனிவண்டியை இழுத்துச் சென்ற நாய் அணியை முன்நடத்திச் சென்ற நாய் ஆகும். இந்த அணியானது 1925-ஆம் ஆண்டின் மிக நீண்ட செலவை (பயணத்தை) மேற்கொண்டது. இச்செலவு அலாசுக்காவின் நோம் நகரத்தில் இருந்து ஆங்கரேசு நகரத்திற்கு டிப்தீரியா என்னும் தொற்று நோய் பரவாமல் தடுக்க நோய்க்கு எதிர் மருந்தைக் கொண்டு செல்வதற்காக அமைந்தது.
தோகோ சைபீரிய அசுக்கி (Siberian Husky) வகை நாய். இந்நாய்க்கு இரசிய-சப்பானியப் போரில் பங்குகொண்ட அய்காச்சிரோ தோகோ என்னும் தளபதியின் நினைவாக தோகோ எனப்பெயரிடப் பட்டது. இந்த செலவின் போது தோகோவின் வயது 12.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.