தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்
தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் (The Deep Space Network (DSN)) ஆகும். இவை உலகளாவிய வலைப்பின்னல் ஆகும். இவற்றில் மிகப்பெரிய அலைவாங்கி மூலம் கோள்களுக்கு இடையே செலுத்தும் விண்வெளி ஓடங்களில் இருப்பிடத்தை அறியவும் அவற்றைக் கண்காணித்து கட்டுப்படுத்தவும் முடியும். உதாரணமாக இந்தியாவின் மங்கள்யான் செயற்கைக் கோள் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும் போது அதைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் இவை பயன்படுகின்றன. இந்தியாவிற்கான தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் பெங்களூருக்கு அருகில் 'பயலாலு' பகுதியில் 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளும் தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் அமைப்பை அமைத்துள்ளன.

அமைவிடங்கள்

தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் அலைவாங்கிகள் 120° இடைவெளியில் உலகின் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ன.[1][2] இதன் மூலம் தொலைதூரச் செயற்கைக் கோள்களை ஒரு இடத்தில் இருந்து கண்காணிக்க இயலாவிட்டாலும் அடுத்த இடத்திலிருந்து கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ இயலும். அவை,
- அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள கோல்ட்ஸ்டோன் தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம் (Goldstone Deep Space Communications Complex)
- ஆஸ்திரேலியாவின் கான்பெராவிலுள்ள கான்பெரா தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம் (Canberra Deep Space Communication Complex )
- ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டிலுள்ள மாட்ரிட் தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம் (Madrid Deep Space Communication Complex)
மேற்கோள்கள்
- Haynes, Robert (1987). How We Get Pictures From Space (Revised edition ). Washington, D.C.: U.S. Government Printing Office. http://ntrs.nasa.gov/archive/nasa/casi.ntrs.nasa.gov/19880001821_1988001821.pdf. பார்த்த நாள்: 2013-09-19.
- "About the Deep Space Network". JPL. பார்த்த நாள் 2012-06-08.