தைட்டானியம்(III) அயோடைடு

தைட்டானியம்(III) அயோடைடு (Titanium(III) iodide) என்பது TiI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். அடர் ஊதா நிறத்தில் காணப்படும் இத்திண்மம் சிதைவடைவதை தவிர கரைப்பான்களில் கரையாது.

தைட்டானியம்(III) அயோடைடு
இனங்காட்டிகள்
13783-08-9
பண்புகள்
I3Ti
வாய்ப்பாட்டு எடை 428.58 g·mol−1
தோற்றம் கருப்பு-ஊதா திண்மம்
அடர்த்தி 4.96 கி.செ.மீ−3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு

தைட்டானியமும் அயோடினும் சேர்ந்து தைட்டானியம்(III) அயோடைடு உருவாகிறது:[2]

2Ti + 3I2 ---> 2 TiI3

TiI4 சேர்மத்தை அலுமினியத்துடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதாலும் தைட்டானியம்(III) அயோடைடு தயாரிக்கலாம்[3].

கட்டமைப்பினைப் பொறுத்தவரையில் தைட்டானியம்(III) அயோடைடு முகப்பு பகிர்வு எண்முகத்தின் பலபடியாகத் தோற்றமளிக்கிறது. 323 கெல்வின் வெப்பநிலைக்கு மேல் Ti---Ti பிணைப்புக்கு இடையிலான இடைவெளி சமமாக உள்ளது. ஆனால் இவ்வெப்பநிலைக்கு கீழாக இச்சேர்மம் நிலைமாற்றத்திற்கு உட்படுகிறது. தாழ் வெப்பநிலை கட்டத்தில் Ti---Ti தொடர்புகள் குட்டையாகவும் நீண்டும் மாறி மாறி அமைகின்றன. தாழ்வெப்பநிலை கட்டமைப்பானது மாலிப்டினம் டிரைபுரோமைடின் கட்டமைப்பை ஒத்ததாக உள்ளது[1]

மேற்கோள்கள்

  1. Joachim Angelkort, Andreas Schoenleber, Sander van Smaalen: Low- and high-temperature crystal structures of. In: Journal of Solid State Chemistry. 182, 2009, S. 525–531, எஆசு:10.1016/j.jssc.2008.11.028.
  2. F. Hein, S. Herzog "Molybdenum(III) Bromide" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1407.
  3. Catherine E. Housecroft, A. G. Sharpe (2005) (in German), [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] Inorganic Chemistry], Pearson Education, pp. 601, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13039913-2, கூகுள் புத்தகங்களில்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.