தேசிய புலனாய்வு முகமை (இந்தியா)

தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA) இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை எதிர்க்க இந்திய அரசால் ஒன்றிய அளவில் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். பல மாநிலங்களின் ஊடாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை எதிர்கொள்ள மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது செயலாற்ற தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2008 மும்பை தாக்குதல்களை அடுத்து இந்த அமைப்பை உருவாக்கிட வழி செய்யும் தேசிய புலனாய்வு முகமை மசோதா திசம்பர் 16, 2008ஆம் ஆண்டு நடுவண் உள்துறை அமைச்சரால் நாடாளுமன்றத்தில் வழிமொழியப்பட்டது.[1][2][3] இதன் முதல் தலைமை இயக்குனர் ஆர். வி. இராஜூ பணி ஓய்வு பெற்றதை அடுத்து தற்போது எஸ். சி. சின்கா தலைமை இயக்குனராகப் பணியாற்றி வந்தார். தற்போதய தலைமை இயக்குனர் ஒய்.சி.மோடி 18.09.2017 முதல் பணியாற்றிவருகிறார்.

தேசிய புலனாய்வு முகமை (இந்தியா)
தலைமையகம்புது தில்லி, இந்தியா
வலைத்தளம்www.nia.gov.in

தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா 2019

தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா[4] நாடாளுமன்றத்தில் சூலை 2019-இல் நிறைவேற்றப்பட்டது. தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் வகையில், தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் ஏற்கனவே 2008-இல் திருத்தம் கொண்டு வரப்பட்டு தற்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சூலை 2019-இல் நிறைவேற்றப்பட்டுள்ளது.[5] தற்போது தீவிரவாத மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட வழக்குகளை மட்டும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆட்கடத்தல், கள்ள நோட்டு அச்சடித்தல், புழக்கத்தில் விடுதல் தொடர்பான குற்றங்கள், இணைய வழி தீவிரவாதம், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை போன்ற பல குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தை தேசிய புலனாய்வு முகமைக்கு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.