தெற்கு அந்தமான் தீவு

தெற்கு அந்தமான் தீவு (South Andaman Island) அந்தமானின் தெற்கில் அமைந்துள்ள தீவாகும். அந்தமான் தீவுகளில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் இத்தீவிலேயே வாழ்கின்றனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர் இங்கு அமைந்துள்ளது. இத்தீவின் சில பகுதிகளுக்கு இந்தியரல்லாதோர் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உட்துறை அமைச்சின் அனுமதியுடன் அப்பகுதிகளுக்கு செல்ல முடியும். இத்தீவுக் கூட்டத்தின் எனைய தீவுகளைப் போன்று, இத்தீவும் 2004 ஆழிப்பேரலையினால் பெருமளவு உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டது.

தெற்கு அந்தமான்
South Andaman
அந்தமான் தீவுகளில் தெற்கு அந்தமான் தீவின் அமைவிடம் (சிவப்பில்)
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்11°47′N 92°39′E
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
பரப்பளவு1,347.7 km2 (520.3 sq mi)
உயர்ந்த ஏற்றம்456.6
உயர்ந்த புள்ளிகொய்யோப்
நிர்வாகம்
இந்தியா
ஒன்றியப் பகுதிஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
பெரிய குடியிருப்புபோர்ட் பிளேர் (மக். 100,186)
மக்கள்
மக்கள்தொகை181,949 (2001)
அடர்த்தி135
இனக்குழுக்கள்அந்தமான் மக்கள்

அந்தமான் தீவுகளில் மூன்றாவது பெரிய தீவு இதுவாகும். நடு அந்தமான் தீவின் தெற்கே இத்தீவு உள்ளது. இரண்டும் ஒரு சிறிய சில நூறு மீட்டர்கள் அகல கால்வாயினால் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தீவின் நீளம் 93 கிமீ, அகலம் 31 கிமீ, பரப்பளவு 1348 கிமீ² ஆகும். 2001 கணக்கெடுப்பின் படி, இங்கு 181,949 பேர் வாழ்கின்றனர்.[1]

ஏனைய வடக்குத் தீவுகளைப் போலல்லாது இங்கு மலைகள் குறைவாக உள்ளன. கோய்யோப் மலை 456.6 மீட்டர்கள் உயரமானது.[2]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.